அறுசுவைஜாம் வகைகள்

அன்னாசிப் பழ ஜாம்

Pineapple Jam-jpg-1025பிரட், பன், சப்பாத்தி, தோசை.. இப்படி பல ஐட்டங்களுக்கு ஜாம்தான் நம்ம வீட்டு குட்டீஸோட ஃபர்ஸ்ட் சாய்ஸ். கடையில் கிடைக்கும் ஜாம்-ல பிசர்வேட்டிவ்ஸ் ஜாஸ்தியா இருக்கும். அதைவிட நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில் ஜாம் தயாரிக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்….!

தேவையான பொருட்கள்:

முற்றிப் பழுத்த அன்னாசி – 1
ஓரளவான தக்காளிப் பழம் – 4
பிரவுன் சுகர் – 500 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
ப்ளம்ஸ் – 50 கிராம்

செய்முறை:

* அன்னாசிப் பழத்தின் தோலை சீவி நடு தண்டை அகற்றி சின்னதாக வெட்டி அரைத்துக்கொள்ளவும்.

* தக்காளிப் பழத்தை கொதி நீரிட்டு மூடி வைத்து தோலுரித்து அதனையும் அரைத்துக்கொள்ளவும்.

* அடி தடிப்பான பாத்திரத்தில் இரண்டையும் கலந்து வற்றக் காய்ச்சவும்.

* நன்றாக வற்றியதும் சீனியை இட்டு வற்ற விடவும். அடித்தடிப்பான பாத்திரமென்றால் அடிக்கடி கிளர தேவைப்படாது.

* நன்றாக இருகி வரும் போது நட்ஸ், பிளம்ஸ் தூவி சிம்மில் வைக்கவும்.

* அன்னாசிப் பழ ஜாம் ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button