ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 8 மோதிரத்துல ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்க கல்யாணம் பத்தி நாங்க சொல்றோம்!

ஒருவரது குணாதிசயங்களை எப்படி அறியலாம் என்று கூற நிறைய வழிகள் இருக்கிறது. சிலர் ஒருவரிடம் பேசிய சில நிமிடங்களில் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று புட்டுப்புட்டு வைப்பார்கள். சிலர் ஒருவரது கண்களையும், அவர்களது பார்வையையும் வைத்தே அந்நபர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று கூறிவிடுவார்கள்.

ஆனால், இங்கே இந்த மோதிரங்களில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்வதன் மூலம்… உங்கள் விருப்பதை வைத்து நீங்கள் எதை அதிகம் விரும்புவீர்கள்… உங்கள் திருமண வாழ்க்கை எந்த வயதில் துவங்க வாய்ப்புகள் உண்டு என்று அறிந்துக் கொள்ளலாம்…

pickanengagementringandknowwheny 1

#1

உங்கள் தேர்வு ஒன்றாக இருந்தால்…

உங்கள் திருமண நிச்சயம் 27 – 30 வயதுக்குள் நடக்கும். ஒரு நபராக உங்களை பற்றி கூற வேண்டும் என்றால். நீங்கள் சுதந்திரமான வாழ்க்கயை விரும்பும் நபராக இருக்க வேண்டும். அல்லது திருமணம் செய்துக் கொள்வதற்குள் சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

தனக்கான ஒரு நல்ல சீரான வேலை மற்றும் தேவையான சம்பளம் என்பதில் அதிக கவனம் கொண்டிருக்கும் நபராக நீங்கள் இருக்கலாம்.

#2
#2
உங்கள் தேர்வு இரண்டாக இருந்தால்…

உங்கள் திருமணம் நிச்சயம் 38 – 40 வயதுக்குள் நடக்கலாம். ஒரு நபராக உங்களை பற்றி கூற வேண்டும் என்றால், நான் இன்னும் செய்து முடிக்க வேண்டிய கடமை நிறைய இருக்கிறது என்று கருதும் நபராக நீங்கள் இருக்கலாம்.

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைக் காட்டிலும், அதிக அனுபவம் தேவை, அதிகம் சாதிக்க வேண்டும் எண்ணமே உங்கள் மனதில் ஆழமாக இருக்கும்.

#3
#3
உங்கள் தேர்வு மூன்றாக இருந்தால்…

உங்கள் திருமண நிச்சயம் 19- 22 வயதில் நடக்கலாம். உங்களை பற்றி கூற வேண்டும் எனில், திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களது வாழ்நாள் ஆசையாக இருக்கலாம். சிறு வயதில் இருந்து திருமணம் குறித்த ஆவல் உங்களிடம் அதிகம் இருந்திருக்கும்.

நீங்கள் இளம் வயதிலேயே குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையின் அம்சங்களாய் கட்டிலும், துணையின் அம்சங்கள் மீது அதிக கவனமும் ஈர்ப்பும் கொண்டிருக்கும் நபராக இருக்க வாய்ப்புகள் உண்டு.

#4

உங்கள் தேர்வு நான்காக இருந்தால்…

உங்கள் திருமண நிச்சயம் 23 – 26 வயதுக்குள் நடக்க வாய்ப்புகள் உண்டு. உங்களை பற்றி கூற வேண்டும் எனில், திருமணம் செய்துக் கொள்ளும் முன்பு நல்ல படிப்பு, சிறந்த வேலை, முடிந்த வரை ஊர் சுற்றி பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கலாம்.

இல்வாழ்க்கையை அனுபவிக்கும் முன்னர், இந்த உலகை ஒருமுறை சுற்றி பார்த்து அந்த அனுபவம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆசை உங்களிடம் இருக்கலாம்.

#5
உங்கள் தேர்வு ஐந்தாக இருந்தால்…

உங்கள் திருமண நிச்சயம் 31-33 வயதுக்குள் நடக்க வாய்ப்புகள் உண்டு. உங்களை பற்றி கூற வேண்டும் எனில், நீங்கள் சாதிக்க வேண்டும் என்ற கொள்கை உள்ள நபர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பெரிதாக செய்ய வேண்டும் என்று நேரம் அமையும் வரை காத்திருக்கும் குணம் இருக்கும்.

வேலை / தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும், வேலையில் வெற்றிக் கண்ட பிறகே திருமணம் என்ற கொள்கையும் இருக்கலாம்.

#6

உங்கள் தேர்வு ஆறாக இருந்தால்…

உங்களது திருமண நிச்சயம் முப்பதுகளின் இறுதி அல்லது நாற்பது வரை தள்ளிப்போகலாம். உங்களை பற்றி கூற வேண்டும் எனில், வாழ்க்கையின் சந்தோஷத்தை கமிட்மென்ட் என்ற பேரில் இழக்க விருப்பமில்லாத நபர்.

நீங்கள் எந்த ஒரு கடமையையும் நீங்களாக எடுத்து செய்ய முன் வர மாட்டீர்கள். திருமணம் என்பது கட்டாயம் செய்துக் கொள்ள வேண்டுமா? எண்ணம் கூட இருக்க வாய்ப்புகள் உண்டு.

#7

உங்கள் தேர்வு ஏழாக இருந்தால்…

உங்கள் திருமண நிச்சயம் 34 – 37 வயதுக்குள் நடக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள நீங்களாகவே நிறைய நேரம், காலம் எடுத்துக் கொள்வீர்கள்.

தனக்கான சரியான துணை இவர் தான் என்று உங்கள் மனம் கூறும் வரை திருமணம் செய்துக் கொள்ள காத்திருப்பீர்கள்.

#8
உங்கள் தேர்வு எட்டாக இருந்தால்…

உங்கள் திருமண நிச்சயம் நாற்பதுகளில் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு. திருமணம் என்பது அவசியம் செய்துக் கொள்ள வேண்டிய விஷயம் அல்ல என்ற எண்ணம் உங்கள் மனதில், எண்ணத்தில் ஓடலாம்.

திருமணத்தை காட்டிலும், வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் இருக்கிறது என்று கருதுவீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button