குந்தன் ஜூவல்கை வேலைகள்

மணி மாலை, கம்மல் செய்முறை விளக்கம்

மணி மாலை செய்யும் முறை 
IMG 1323
தேவையான பொருட்கள் : 
கியர் ஒயர்
கத்தரிக்கோல்
பிளேயர்
ப்ளூ கலர் மணி ( தேவையான கலர் மணிச்சரம் )
குட்டி கோல்ட் மணி
சக்ரி
பெரிய கோல்ட் மணி
மணி முடிவில் கோர்க்கும் ஹூக் செட். ( இதில் நான்கு வளையம், ஒரு ஹூக் இருக்கும் )
கியர் லாக்

 

 

 

IMG 1263
IMG 1264

கருப்பா குட்டி, குட்டியா இருப்பது தான் கியர் லாக்.

IMG 1277

கியர் ஒயர், கத்தரிக்கோல் எடுத்துக்கணும். நமக்கு எந்த அளவுக்கு மணி மாலை வேண்டுமோ அதை விட கொஞ்சம் அதிகமாக கியர் ஒயர் கட் பண்ணி எடுத்துக்கணும்.

IMG 1281

இந்த மாதிரி ரெண்டு முடிவையும் புடிச்சுகிட்டு கோர்த்தா சீக்கிரம் கோர்த்து விடலாம். நமக்கு தேவையான மாதிரி மணிகளை கோர்த்து வைக்கணும்.

IMG 1282

ஒன்னரை  மணி சரத்தில் ரெண்டு மாலைகள் செய்யலாம்.

IMG 1285

மணி மாலையின் முடிவில், ஒரு பக்கம் நான்கு வளையம் வைத்து கியர் லாக் போட்டு லாக் பண்ணனும்.

IMG 1293
கியர் லாக் -யை பிளேயர் கொண்டு அழுத்தி விடனும்.
IMG 1297

மற்றொரு பக்கம் கியர் லாக்,  ஹூக் வைத்து கீழ் படத்தில் இருக்க மாதிரி கோர்க்கணும்.

IMG 1304

கியர் லாக், ஹூக், திரும்பவும் கியர் லாக் மாதிரி கோர்க்கணும்.

IMG 1307

நல்லா கியர் ஒயரை இழுத்து புடிச்சு கிட்டு, பிளேயர் வைத்து கியர் லாக் – யை அழுத்தி விடனும்.

IMG 1308
கீழ்  உள்ள படத்தில் உள்ளவாறு அழுத்தணும்.
IMG 1309
கியர் லாக் அழுத்தி விட்டால் மணி மாலை அறுந்து போகாத மாதிரி கிடைத்து விடும்.  எக்ஸ்ட்ரா கியர் ஒயரை கட் பண்ணிடனும். ஒரு மாலைக்கு 4  கியர் லாக் போதும்.
IMG 1323

இரண்டு மணி மாலைகள் தயார்.

மணி மாலைக்கு செட் – டா கம்மல் செய்யும் முறை

தேவையான பொருட்கள் :

கம்பி
குட்டி கோல்ட் மணி
ப்ளூ கலர் மணி – 8
பிளேயர்
கத்தரிக்கோல்
ஹாங்கிங் ஹூக்

IMG 1311
கம்பி எடுத்து இந்த மாதிரி மணியை கோர்த்துக்கனும்.
IMG 1315
பிளேயர் வைத்து மேலே  கம்பியை இந்த மாதிரி வளைக்கனும்.
IMG 1316
ஹாங்கிங் ஹூக் எடுத்து வளையத்தை  பிரித்து, இந்த மணியை அதில் கோர்க்கணும்.
IMG 1318
IMG 1320

வளையத்தை சேர்த்து விட்டால் கம்மல் தயார்.

IMG 1321

அழகான மணி மாலை, கம்மல் செட். இந்த மாதிரி கலர் கலராக மணி சரம் வாங்கி மல்டி கலர் மணி மாலையும் செய்யலாம்.  மற்ற மணி மாலைகள் பார்க்க  இங்கே     கிளிக் செய்து பாருங்க.

IMG 1323

எனக்கு தெரிஞ்ச அளவுக்கு ஏதோ செய்முறையை  விளக்கிட்டேன்…. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க…..

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button