30.9 C
Chennai
Sunday, May 26, 2024
Duck Meat Gravy29 jpg 925
அசைவ வகைகள்

செட்டிநாடு சிக்கன் கறி

என்னென்ன தேவை?

சிக்கன்- 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 2டீஸ்பூன்
கறிவேப்பிலை -தேவையான அளவு
எண்ணெய் – 2டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை- 3டீஸ்பூன்

செட்டிநாடு மசாலா தயாரிக்க

தனியா விதை- 3 டீஸ்பூன்
உலர் சிவப்பு மிளகாய் – 4 முதல் 5
சீரகம்- 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை -5 செமீ குச்சி
ஜாதி பத்திரி- 2 துண்டுகள்
மிளகு – 2 தேக்கரண்டி
ஏலக்காய்-5
நட்சத்திர சோம்பு 1
கிராம்பு- 4
தேங்காய் துருவல் -1/4 கப்
எப்படி செய்வது?

சுத்தம் செய்து வைத்த சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 15 முதல் 20 நிமிடங்கள் வைத்த பிறகு சமைக்க எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு கடாயில் தேங்காயை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து வறுக்கவும். ஒரு குறிப்பிட்ட அளவு வறுத்து முடித்ததும் தேங்காய் சேர்த்து வறுத்து இறக்கி அரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை சேர்த்து கிளறி அதனுடன் சிக்கனை சேர்த்து சில நிமிடத்திற்கு பிறகு தக்காளி கலந்து குக்கரை மூடி வைத்து வேகவிடவும். 2விசிலில் சிக்கன் வெந்ததும் கடாயில் கொட்டி சிறிது நேரம் கிளறி பின்னர் அரைத்த மசாலாவை கலந்து வேவிடவும். உப்பு சரியானதாக இருக்கிறதா என சரி பார்த்து கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
Duck Meat Gravy29 jpg 925

Related posts

திருநெல்வேலி ஸ்டைல்: சிக்கன் குழம்பு

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

சூப்பரான மட்டன் கடாய்

nathan

இறால் தொக்கு

nathan

சுவையான நீலகிரி சிக்கன் குருமா

nathan

சுவையான க்ரீமி கடாய் சிக்கன்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி

nathan

மட்டன் லிவர் மசாலா

nathan

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan