30.6 C
Chennai
Saturday, May 18, 2024
10268517 835601406460593 567295362685726387 n
சரும பராமரிப்பு

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் மாற….

சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது என்று புலம்புவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு எளிய தீர்வு உள்ளது. ஒரு கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து நன்றாக காய்ந்ததும் கழுவவும்.

பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி,
15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இதுவும் விரைவில் நல்ல பலனைத்தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி 15 நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் படிப்படியாக கருப்பு நிறம் மாறும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.
10268517 835601406460593 567295362685726387 n

Related posts

சூப்பர் டிப்ஸ் முகத்திற்கு பளபளப்பை தரும் ஆமணக்கு எண்ணெய்!

nathan

இவைகள் இளமையிலேயே சருமத்தை சுருங்கச் செய்யும் என்பது தெரியுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பாதாமை எப்படி உபயோகித்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும் ?

nathan

பெண்களே இடுப்பு பகுதியில் ஏற்படும் கருமையை போக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சருமத்தை சுத்தமாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்

nathan

பிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்புத மூலிகைகள் !!

nathan

5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கும் என தெரியுமா?

nathan

கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா? அவர்கள் தங்கள் முகத்திற்கு தினமும் சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துவது தான்.

nathan

கைகளில் சுருக்கமா?சரி செய்ய இதோ அசத்தலான டிப்ஸ்

nathan