ஊறுகாய் வகைகள்

எலுமிச்சை ஊறுகாய்

தேவையான பொருள்கள் –

எலுமிச்சம்பழம் – 10
மிளகாய்த்தூள் – 3 மேஜைக்கரண்டி
காயத்தூள் – 1 தேக்கரண்டி
வெந்தயத்தூள் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – 100 கிராம்
தாளிக்க –
நல்லெண்ணெய் – 6 மேஜைக்கரண்டி
கடுகு – 2 தேக்கரண்டி

செய்முறை –

எலுமிச்சம் பழத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் உப்பு சேர்த்து 2 நாட்கள் வரை ஊற விடவும். ஒரு நாளில் 2 அல்லது 3 தடவை குலுக்கி மூடி வைக்கவும்.
நன்கு ஊறிய பின் மிளகாய்த் தூள், காயத்தூள், வெந்த்தயத் தூள் சேர்த்து 2 நாட்கள் ஊற விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் எண்ணெயை ஊறுகாய் மேல் ஊற்றி நன்கு கிளறி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

குறிப்பு –

உப்பின் அளவு ஐந்துக்கு ஒரு பங்கு. அதாவது 5 கப் நறுக்கிய துண்டுகள் இருந்தால் ஒரு கப் உப்பு போட வேண்டும்.
Lemon pickle tamillemon pickle tamillemon pickle tamilnadu stylelemon pickle recipe tamilnadu stylelemon pickle recipe in tamil videolemon pickle video in tamillemon pickle making in tamilhow to make lemon pickle tamilnadu st

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button