Prawn Peppers Fry8
அசைவ வகைகள்

இறால் குடமிளகாய் வறுவல்

பொதுவாக மீன் வகைகளில் இறால் மீனுக்கு தனி ருசி உண்டு. அதிலும் அதை வறுவலாக செய்து சாப்பிட்டால், அதன் ருசி நாக்கை சப்புக் கொட்டவைக்கும்.

தேவையான பொருட்கள்:
இறால் – 1 கிலோ
பச்சை குடமிளகாய் – 2
சிவப்பு குடமிளகாய் – 1
வெங்காயம் – 4
பூண்டு – 6 துண்டுகள்
தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
சீரகம் – 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய்த்தூள் – 2 டீ ஸ்பூன்
உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன்
எண்ணெய் – 1/2 கப்

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், குடமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும். பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். அடி கனமான சட்டியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு தொடர்ந்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவேண்டும். பிறகு குடமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும். பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு கிளறிவிடவேண்டும். குடமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். பிறகு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும்.
Prawn%20Peppers%20Fry8

Related posts

கணவாய்ப் பொரியல்

nathan

சுவையான முட்டை சுக்கா

nathan

சூப்பர்” இறால் ப்ரை”

nathan

ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல்

nathan

சிக்கன் கிரீன் கிரேவி:

nathan

மொச்சை நெத்திலி மீன் குழம்பு

nathan

மஷ்ரூம் ஆம்லெட்

nathan

காஷ்மீர் மிர்ச்சி மட்டன் குருமா

nathan

தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி

nathan