29.5 C
Chennai
Wednesday, May 22, 2024
21 60df4f45bcb35
சிற்றுண்டி வகைகள்

சுவையான பிஸ்கீமியா ஸ்நாக்ஸ்- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

முட்டை கோஸ் – கால்கிலோ

மைதா மாவு – கால் கிலோ

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1

பொடியாக நறுக்கிய ப.மிளகாய் – 2

வேக வைத்த முட்டை – 3

கொத்தமல்லி தழை – தேவையான அளவு

மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய், தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த முட்டையை துண்டுகளாக நறுக்கி போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், முட்டை கோஸ், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

அடுத்து, மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதோடு சிறிதளவு காய்ச்சிய எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சமோசா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் சிறிய உருண்டைகளாக மாவை உருட்டி முன்னர் பிசைந்து வைத்திருந்த ஸ்டபிங்கை உள்ளே வைத்து ஓரங்களில் தண்ணீர் விட்டு மடித்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் அதை பொன்னிறத்தில் பொரித்து எடுத்தால், சுவையான ஸ்நாக்ஸ் பிஸ்கீமியா தயார்.

Related posts

பிரெட் மசாலா

nathan

தீபாவளி ஸ்பெஷல் முந்திரி – பாதாம் ரோல்

nathan

இளநீர் ஆப்பம்

nathan

பொங்கல் ஸ்பெஷல்: சர்க்கரை பொங்கல்

nathan

எள் உருண்டை :

nathan

சொதி

nathan

கம்பு இட்லி

nathan

எள்ளு கடக் பூரி

nathan

பேபி கார்ன் பஜ்ஜி

nathan