15 beetroot pakoda
கார வகைகள்

சுவையான பீட்ரூட் பக்கோடா

உங்கள் குழந்தைகள் சத்து நிறைந்த பீட்ரூட்டை சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் அவர்களை பீட்ரூட் சாப்பிட வைக்க மிகவும் சிறப்பான வழி ஒன்று உள்ளது. அது என்னவென்றால் பீட்ரூட்டைக் கொண்டு பக்கோடா செய்து கொடுப்பது தான். ஆம், குழந்தைகள் சாப்பிட மறுக்கும் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகளை அவர்களுக்கு பிடித்தவாறு சமைத்து கொடுத்தால், குழந்தைகள் மறுக்காமல் சாப்பிடுவார்கள்.

அந்த வகையில் ஒன்று தான் பக்கோடாவாக செய்து கொடுப்பது. இங்கு அந்த பீட்ரூட் பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து, உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்.

Beetroot Pakoda Recipe
தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 2 (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் எண்ணெயை தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின்பு அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பீட்ரூட் பக்கோடா ரெடி!!!

Related posts

குழிப் பணியாரம்

nathan

இனிப்பு மைதா பிஸ்கட்

nathan

சோயா கட்லெட்

nathan

மீன் கட்லட்

nathan

சோயா தானிய மிக்ஸர்

nathan

உருளைக்கிழங்கு காராசேவு!

nathan

சமையல்:கோதுமைமாவு குழிப்பணியாரம்

nathan

ஆத்தூர் மிளகு கறி,tamil samyal kurippu

nathan

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது?

nathan