p67e
அசைவ வகைகள்

விருதுநகர் மட்டன் சுக்கா

தேவையானவை:

சின்னவெங்காயம் – 200 கிராம்
எலும்பில்லாத மட்டன் – 200 கிராம்
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
சீரகத்தூள் – 40 கிராம்
மிளகாய்த்தூள் – 20 கிராம்
நல்லெண்ணெய் – 30 மில்லி.
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தையும், மட்டனையும் சின்னச்சின்ன சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டுத் தாளித்து, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம், பொன்னிறமாக வந்தவுடன் ஆட்டுக்கறியையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன், சீரகத்தூளை தூவி, உப்பு சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
p67e

Related posts

நண்டு பிரியாணி.! செய்வது எப்படி.!

nathan

முட்டை குழம்பு வைப்பது எப்படி,ருசியான முட்டை குழம்பு ,egg curry recipe

nathan

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

nathan

சுவையான க்ரீமி கடாய் சிக்கன்

nathan

சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan

மீன்ரின்வறை

nathan

ஜலதோஷத்தை விரட்டும் பெப்பர் சிக்கன்

nathan

நண்டு மசாலா

nathan

இறால் பஜ்ஜி

nathan