29.2 C
Chennai
Tuesday, May 21, 2024
197cd35
ஆரோக்கிய உணவு

சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் நெய்யும் வெல்லமும் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நாம் உண்ணும் உணவுகளின் மூலம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

பலர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கடினமான பணி என நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் இது ஒரு எளிதான விஷயமாகும். அதற்காக அதிக செலவுகள் செய்ய வேண்டும் என சிலர் கூறிவதுண்டு.

ஆனால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது. அவற்றை சரியாக பயன்படுத்துவதன் மூலம் நாம் எளிதாக நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும்.

சில நேரங்களில் பழங்கால ஆயுர்வேத மருத்துவ முறைகள் நமக்கு பயனளிக்கின்றன. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறும்போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஹார்மோன் பிரச்சனைகளை நிர்வகிக்கவும் சில ஆயுர்வேத முறைகள் நமக்கு உதவுகிறது என கூறுகிறார்.

நாம் மதிய உணவிற்கு பிறகு எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் இதற்கு உதவிப்புரியலாம். மதிய உணவிற்கு பிறகு நெய் வெல்லம் கலந்த கலவையை எடுத்துக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்துகிறார்.

வெல்லம் மற்றும் நெய் இரண்டுமே நமது சமையல் அறையில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களாகும். இந்த இரண்டு உணவு பொருட்களின் கலவையானது பசியை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது சருமத்திற்கும் நன்மை பயக்கிறது என கூறப்படுகிறது.​

நெய் வெல்லம் ஆயுர்வேத நன்மைகள்

நெய்யுடன் வெல்லம் கலந்து சாப்பிடும் இந்த முறை ஒரு ஆயுர்வேத முறையாக பார்க்கப்படுகிறது.
பழங்கால மக்கள் இந்த முறையை பின்பற்றியுள்ளனர். நமது உடலுக்கு தேவையான ஒட்டு மொத்த ஊட்டச்சத்து நன்மைகளையும் இந்த கலவை கொண்டுள்ளது.
சிலர் இந்த கலவையை செய்ய சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துவதுண்டு. ஆனால் அதை விடவும் வெல்லம் ஆரோக்கியமானது. இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
மேலும் வெல்லம் உடலில் இரத்த சர்க்கரை அளவை பெரிதாக அதிகரிப்பதில்லை. மேலும் வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் உள்ளன.
எனவே வெல்லம் ஒரு சிறந்த சூப்பர் ஃபுட்டாக உள்ளது. மறுப்புறம் நெய்யை பார்த்தோம் எனில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களை அதிகமாக கொண்ட ஒரு ஆதாரமாக நெய் உள்ளது.
மேலும் இது வைட்டமின் ஏ, ஈ மற்றும் வைட்டமின் டி யை கொண்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின் கே மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கால்சியம் சத்துக்களும் உள்ளது.
எனவே நெய் மற்றும் வெல்லம் இரண்டுமே பல ஊட்டச்சத்துக்களை கொண்ட கலவையாக உள்ளன. வெல்லம் மற்றும் நெய் இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வை பராமரிக்கவும் உதவுகின்றன. எனவே இவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது அது உடல் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது. முடி மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கும் இவை உதவுகின்றன.
மேலும் நல்ல மனநிலையை ஏற்படுத்துவதற்கும் இவை உதவுகின்றன என அறியப்படுகிறது. இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் இது உதவுகிறது.

Related posts

காளான் மொமோஸ்

nathan

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சூப்பர் டிப்ஸ்…

nathan

இந்த உணவுகளை எல்லாம் வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்!!!

nathan

சளி, இருமல் தொல்லைக்கு கறிவேப்பிலை மிளகு குழம்பு

nathan

15 பாடிகாட்ஸ்! உச்சி முதல் உள்ளங்கால் வரை…

nathan

ருசியான பலாக்கொட்டை சமையல்!

nathan

ஹோம் மேட் மயோனைஸ்

nathan

ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்! நலம் நல்லது-10! மருத்துவர் கு.சிவராமன்!!

nathan

துரியன் பழத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

nathan