28.4 C
Chennai
Wednesday, May 15, 2024
mn16
Other News

பெண்களை அதிகம் தாக்கும் அல்சைமர் நோய்

‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.

அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.

60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.

பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.

பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார்.

பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.

மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.

ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.

Courtesy: MalaiMalar

 

Related posts

ஜெயிலர் வசூலை தொடமுடியாமல் தவிக்கும் லியோ..

nathan

இதுதான் நவரசமா? ரோஷினி டிப்ரண்ட் க்ளிக்ஸ்

nathan

பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. பெட்ரோல் பங்க் ஊழியர்மீது வழக்குப்பதிவு!

nathan

பணத்தை அள்ளி செல்லும் மக்கள்! (வீடியோ)

nathan

நடிகர் அருண் விஜய் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள்

nathan

கால்களை விரித்தபடி விருமாண்டி அபிராமி போஸ்..!

nathan

அடுத்த ஆண்டு ராஜ யோகம் இந்த ராசியினருக்கு தான்

nathan

ஒன்றாக நடந்த இறுதிச் சடங்கு-இறப்பிலும் பிரியாத நண்பர்கள்…

nathan

கடற்கரையில் பாட்டிலுடன் கவர்ச்சி விருந்தில் நடிகை அமலாபால்!

nathan