மருத்துவ குறிப்பு

தும்மலால் மிகுந்த அவஸ்தைப்படுகிறீர்களா? அதை உடனடியாக நிறுத்த இதோ சில வழிகள்!!!

மழைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் தும்மல். இந்த தும்மலானது அலர்ஜி, புகை, தூசி போன்றவற்றால் தான் பொதுவாக வரும். அதே சமயம் குளிர்ச்சியான காலநிலை, பருவகால மாற்றம் போன்றவற்றின் காரணமாகவும் தும்மல் வரும்.

இந்த தும்மலானது சோர்வு, மூக்கு ஒழுகல், மூக்கு நமைச்சல் மற்றும் கண்கள் சிவத்தல் போன்றவற்றுடன் இணைந்து தான் வரும். தும்மல் மிகப்பெரிய பிரச்சனை இல்லாவிட்டாலும், இதனை அப்படியே விட்டுவிட்டால், நமக்கு பெருந்தொல்லையாக இருக்கும்.

சிலரது தும்மல், அருகில் உள்ளோர் பயப்படும் படி மிகுந்த சப்தத்துடன் இருக்கும். இப்படி மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் வெளிவரும் தும்மலை நிறுத்துவதற்கு ஒருசில கை வைத்தியங்கள் உள்ளன. அதைப் படித்து பின்பற்றி, தும்மலில் இருந்து விடுபடுங்கள்.

யூகலிப்டஸ் எண்ணெய்
கொதிக்கும் நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் விட்டு, அந்நீரில் ஆவிப் பிடித்தால், தும்மல் மட்டுமின்றி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம்.

சோம்பு டீ
ஒரு கப் சுடுநீரில் 2 டீஸ்பூன் சோம்பை கசக்கிப் போட்டு, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சோம்பை நீரில் சேர்த்த பின் நீரை மீணடும் சூடேற்ற வேண்டாம். அப்படி சூடேற்றினால், அதன் சக்தி போய்விடும்.

மிளகு
1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூளை வெதுவெதுப்பான நீரில் போட்டு, தினமும் 2-3 வேளை குடித்து வந்தால், தும்மல் அடங்கும். அதுவே அந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளித்தால், இருமலுக்கு காரணமான வைரஸ் மற்றும் கிருமிகள் அழியும்.

சீமைச்சாமந்தி டீ
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் உலர்ந்த சீமைச்சாமந்தி பூவைச் சேர்த்து, சில நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் தேன் கலந்து தினமும் குடித்து வர, தும்மல் வருவதைத் தடுக்கலாம்.

இஞ்சி
இஞ்சியை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தால், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் இஞ்சி சுவாச கோளாறுகளையும் சரிசெய்யும்.

பூண்டு
4-5 பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அந்த வாசனையை நுகர்ந்தால், சுவாசப் பாதையில் உள்ள கிருமிகள் அழிந்து சுத்தமாகி, தும்மல் மற்றும் இதர சுவாச கோளாறுகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.

வெந்தயம்
ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 2-3 டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரை குடித்தால் தும்மல் வருவது நின்றுவிடும்.

பாகற்காய்
5-6 பாகற்காயின் இலைகளை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் இலைகளை அகற்றிவிட்டு, அதில் சிறிது வெதுவெதுப்பான நீர் சிறிது சேர்த்து, தேன் கலந்து குடித்து வர, சளி, இருமலால் ஏற்படும் தும்மலைத் தடுக்கலாம்.
ani hapsirik nobetlerinden astim cikiyor h58012

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button