28.6 C
Chennai
Monday, May 20, 2024
52 When you make the
மருத்துவ குறிப்பு

காது குடைந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

பொதுவாக காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரும் பின் ஊக்கு, `ஹேர் பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடைவார்கள் காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது.

ஆனால், இது ஆபத்தானது. பட்ஸ் வைத்து காது குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனை காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்கு தள்ளிவிடுவது தான் நடக்கும்.

அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். பட்ஸ் பட்டு செவிப்பறை கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை பட்ஸ் கொண்டு காது குடைவதை தவிர்ப்பதே நல்லது.

மேலும், காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்கு தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. காதுக்குள் ‘செருமினஸ் சுரப்பிகள்’ உள்ளன.

இவைதான் காதுக்குள் குரும்பியை சுரந்து, செவிப்பறையை பாதுகாக்கின்றன. குறிப்பாக, காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையை பாதிக்காதபடி தடுப்பது, இந்த குரும்பிதான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியில் வந்துவிடும். அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெயை காதில் சில சொட்டுகள் விட்டால், அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும்.

என்றாலும், நாட்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை. காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம்.

அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது. மேலும், காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும்.

Related posts

மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் 10 பயனுள்ள வீட்டு வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா மக்கள் ஏன் வாயு’வை வெளியேற்றுகிறார்கள்? அப்ப இத படிங்க!

nathan

டென்டல் கிளிப்… டென் கைட்லைன்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

nathan

உங்கள் குழந்தையோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா அம்மைத் தழும்புகளை போக்கும் ஓமவல்லி!

nathan

மலச்சிக்கலை இல்லாமலே செய்யும் வாழைப்பழம்….!!!

nathan

காசநோய் மலட்டுத்தன்மையை உண்டாக்குமா?

nathan

பெண்களே கர்ப்பகாலத்தை இனிமையாக கழிக்க இதை மறக்காதீங்க…

nathan