p38
ஆரோக்கிய உணவு

பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை! உணவே மருந்து!!

‘உடல் பருமனைக் குறைக்கிற சக்தி பப்பாளிக்கு உண்டு’னு, வீட்டிலேயே பப்பாளி மரத்தை வளர்த்தாங்க என் அம்மா. பப்பாளியில் வெரைட்டியான டிஃபன் செய்வாங்க. பப்பாளிக் காயோடு, கம்பு மாவு சேர்த்து அம்மா செய்யுற அடை அவ்ளோ ருசியா இருக்கும். சத்தும் அதிகம்!” – என்கிற திருவான்மியூரைச் சேர்ந்த சுகந்தி முரளி, பப்பாளி அடை ரெசிப்பியைப் பகிர்ந்துகொள்கிறார்.

தேவையானவை:
பப்பாளிக்காய் துருவல், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், கம்பு மாவு – 2 கப், தினை குருணை, அரிசிமாவு – தலா கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு ஸ்பூன், உப்பு, நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

அரைப்பதற்கு:
துவரம் பருப்பு, முளைகட்டிய சுண்டல் கடலை – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறுதுண்டு, பட்டை, கிராம்பு – தலா – 2, சர்க்கரை, சோம்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் கடலை இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர, கொடுக்கப்பட்டுள்ள அனைத்துச் சாமான்களையும் கலந்து, தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைக்கவும்.

தோசைக் கல்லைக் காயவைத்து மெல்லிய அடையாக ஊற்றி, தேவையான எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும். குழந்தைகள் விரும்பினால், அடை வேகும்போது, சிறிது சீஸ் சேர்த்துக் கொடுக்கலாம். தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ராஜேஷ், சித்த மருத்துவர், திருநெல்வேலி: பப்பாளியில் வைட்டமின் டி அதிகம். இதனுடன் கம்பும் சேர்ப்பதால், உடலுக்குக் குளிர்ச்சி தரும். பசியைத் தூண்டும். குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்ப்பால் நன்கு சுரக்கும். முளைகட்டிய சுண்டல் புரதத்தில் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள் சாப்பிடலாம். கொழுப்பைக் குறைத்து உடலை வலுவாக்கும்.
p38

Related posts

பதநீரில் இத்தனை மருத்துவ நன்மைகள் உண்டா…..!!

nathan

நம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்!!!

nathan

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

குழந்தைகளுக்கு சத்தான மிளகு – வேர்க்கடலை சாதம்

nathan

ஜீரண சக்தி தரும் சத்தான பூண்டு சட்னி

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

nathan

வறுத்து அரைச்ச முட்டை குழம்பு -கேரளா ஸ்டைல்

nathan

புத்துணர்வு தரும் உணவுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் மருத்துவ மூலிகை ”சீரகம்”! ஒரே ஒரு ஸ்பூன் மட்டும் போதும்

nathan