vegetable aval upma
சமையல் குறிப்புகள்

சுவையான வெஜிடேபிள் அவல் உப்புமா

காலை வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு ஏதேனும் ஒரு உணவு செய்ய நினைத்தால், வெஜிடேபிள் அவல் உப்புமாவை செய்து கொடுங்கள். ஏனெனில் அந்த வெஜிடேபிள் அவல் உப்புமாவானது மிகவும் சுவையாக இருப்பதுடன், அதில் உள்ள காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் தரவல்லது. மேலும் இந்த ரெசிபியானது மதிய வேளையில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்றவாறும் இருக்கும்.

சரி, இப்போது அந்த வெஜிடேபிள் அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அவல் – 1 கப்
கேரட் – 2 (பொடியாக நறுக்கியது)
பட்டாணி – 1/4 கப்
வறுத்த வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
மல்லி தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட் மற்றும் பட்டாணியை சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவலை நீரில் போட்டு, அவல் நீரில் மூழ்கும் வரை ஊற வைக்க வேண்டும்.

அதற்குள் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, மசாலாப் பொருட்கள் காய்கறியுடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள அவலை பிழிந்து, நீரை முற்றிலும் வெளியேற்றிவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, கொத்தமல்லி மற்றும் வேர்க்கடலையைத் தூவி ஒருமுறை பிரட்டி இறக்கினால், வெஜிடேபிள் அவல் உப்புமா ரெடி!!!

Related posts

பன்னீர் பெப்பர் ப்ரை

nathan

5 கிலோ குறைக்கனுமா? இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்!

nathan

சமையல் குறிப்புகள்! சமையலில் கலக்க…

nathan

சுவையான செட்டிநாடு முட்டை மசாலா

nathan

சுவையான கத்திரிக்காய் சாம்பார்

nathan

சூப்பரான பன்னீர் வெஜிடேபிள் குருமா

nathan

சுவையான சாஃப்ட் சப்பாத்தி

nathan

சுவையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி?

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika