28.9 C
Chennai
Wednesday, May 22, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

tips-for-oily-skin-faceகாலங்கள் மாறிவரும் போது நமது சருமமும் அதற்கு தகுந்தாற்போல் மாறத் துவங்கும். இதனால் நாம் நமது சருமத்தை காலத்திற்கு ஏற்றாற் போல் பராமரிக்க வேண்டும். வெயில் காலங்களில் நமது சருமம் சீக்கிரமாக வாடிவிடும் அதேபோல் மழைக்காலங்களில் வறண்டு காணப்படும். இதனால் ஏற்படும் சரும நோய்களில் இருந்து விடுபட நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும் லோஷன்களையும் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே எளிய முறையில் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டே பராமரிக்கலாம்.

நீங்கள் அதிர்ஷ்டம் இல்லதவாராக இருந்தால்தான் உங்கள் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு முகம் முழுவதும் பருக்கள் வரத் தொடங்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த சரும பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மனஅழுத்தம் மன நோய் போன்றவைகள் தான் ஆகும். சர்க்கரை மற்றும் சீஸ் வகைகளான சாக்லெட்களும் அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கலாம். உங்கள் அழகான முகத்தில் பருக்கள் நிரம்பி வழிந்தால் உங்கள் வாழ்வே சோகமாகி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். இது மட்டுமல்லாது பருக்கள் ஏற்படும் தழும்புகள் இதை விட கொடுமையானவைகளாக இருக்கும். மேலும் அவை வருத்தப்படச் செய்யும்.

உங்கள் சருமம் தான் உங்களது உற்ற நண்பன். ஆதலால், சருமத்தை சிறந்த வழியில் கவனமாக பாதுகாக்க வேண்டும். உங்கள் சருமத்தில் வெடிப்பு ஏற்பட்டாலோ அல்லது சிதைவு ஏற்பட்டாலோ அதனை வெறுக்கக் கூடாது. இதற்கு தீர்வு தான் என்ன? விலை உயர்ந்த க்ரீம் அல்லது இரசாயன சிகிச்சை முறையை நாடுவதா? கண்டிப்பாக இல்லை! வீட்டிலேயே சிகிச்சை செய்து இந்த சரும பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காணலாம். உங்கள் சருமத்திற்கும் சுவாசம் உண்டு. அதனால் அதனை கவனமாக கையாள வேண்டும். பொறுமையே இதன் சாரம். இந்த சிகிச்சைகளின் பலனை அடைவதற்கு சில நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மிகுந்த கவனத்துடன் கையாளுவதே இந்த சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகும். இங்கு பருக்களால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சிகிச்சை செய்வதற்கான வழிகளை படிக்கலாம்.

 

முட்டையின் வெள்ளைக்கரு

Image

நீங்கள் முட்டை சாப்பிடுபவராக இருந்தால், முட்டையின் வெள்ளைக்கரு நமது டயட்டில் கால்சியத்தை சேர்ப்பதோடு மட்டுமல்லாது சரும பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்கும். முட்டை வெள்ளைக்கரு சரும பாதிப்புகளுக்கு ஒரு எளிமையான தீர்வாக இருக்கும். அதில் இருக்கும் ப்ரோடீன் மற்றும் கனிமங்கள் சரும பாதிப்பை எதிர்த்து செயல்பட்டு உங்கள் சருமத்தை மிளிரச்செய்யும். மலிவான விலையில் இந்த முறை உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகத்தில் சிறிது நேரம் தடவி காயவைத்து பின்னர் முகத்தை கழுவவும்.

மசாலாப் பொருட்கள்

Image

மசாலாப் பொருட்கள் மூலம் சரும பாதிப்புகளுக்கு தீர்வு காணலாம். ஆம்! தேன் மற்றும் பட்டையை சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போடலாம். இந்த தேன் மற்றும் லவங்கப்பட்டையின் கலவை சரும பாதிப்புகளுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கும். லவங்கத்தில் உள்ள ஆண்டிபாக்டீரியல் தன்மை பாக்டீரியாக்களை அழிக்கும் மேலும் தேன் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு பொருளாகும். இந்த கலவையை சரும பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த தீர்வு என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?

பப்பாளியின் அதிசயம்

Image

இன்று கடைகளில் கிடைக்கும் சரும கிரீம்களில் இருக்கும் முக்கியமான தாதுப்பொருள் பப்பாளிதான். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் வழிகளில் ஒன்றாகும். சிறிது பப்பாளியை மசித்து உங்கள் சருமத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் காயவிடவும். வெந்நீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவவும். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு தீர்வுகாண சிறந்த வழியாகும்.

மஞ்சள் வாழைப்பழம்

Image

வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்னர் அதன் தோலை உங்கள் சருமத்தில் தடவி வந்தால் அது சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். நீங்கள் சாப்பிட்ட வாழைப்பழத் தோலை உங்கள் முகம் முழுவதும் தடவவும். 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.

எலுமிச்சை

Image

அழகு பராமரிப்பு என்றாலே எலுமிச்சை இல்லாத ஒன்று எதுவும் இல்லை. இந்த எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கான முக்கிய தீர்வாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். மேலும் எலுமிச்சை உங்கள் சருமத்தை பக்குவப்படுத்தி செத்த அணுக்களை நீக்கும். சருமத்தை வெளுப்பாக்க இது உதவுவதால் உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க உதவும். எலுமிச்சை சாற்றை உங்கள் சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும்.

சரும புத்துணர்வு

Image

உங்கள் சருமம் புத்துணர்வு பெறுவதற்கு சிறிது புதினா இலைகளை உபயோகியுங்கள். அது உங்கள் சரும பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். முகத்தை நன்றாக கழுவிய பின்பு சிறிது நேரம் கழித்து புதினா சாற்றை எடுத்து முகத்தில் தடவவும். அதனை உங்கள் முகம் முழுவதிலும் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து அது காய்ந்த பிறகு முகத்தை கழுவவும். நீங்களே அதன் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

Related posts

அம்மை வடு அகல

nathan

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க ,beauty tips tamil,beauty tips skin tamil

nathan

நடிகர் விநாயகன் சர்ச்சை பேச்சு! பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்

nathan

இந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் – Best Beauty Secrets of Indian Women

nathan

சருமத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் பொருட்கள் இதுதான்..!!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பெர்பியூம் நாள் முழுவதும் நீடிக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

உங்களுக்கு தெரியுமா கருவளையங்களை போக்க மேக்கப் மட்டும் போதாது..! இதை முயன்று பாருங்கள்!

nathan

பாத் உப்பை பயன்படுத்தி வருவதால் சருமத்திற்கு என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும்…..

sangika