28.9 C
Chennai
Wednesday, May 22, 2024
4 foods harm digestion
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா செரிமான மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!!

உடலில் உள்ள செரிமான மண்டலம் சீராக இயங்காவிட்டால், உடலில் பல்வேறு நோய்கள் விரைவில் தாக்கும். தற்போது ஜங்க் உணவுகளின் மீது மக்கள் அதிக நாட்டம் கொண்டிருப்பதால், பலர் மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். செரிமான மண்டலம் நன்றாக இயங்காமல் இருந்தால், உணவுகள் சரியாக செரிக்கப்பட்டு, அதனால் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போய்விடும். மேலும் உடலில் நச்சுக்களின் அளவும் அதிகரிக்கும்.

ஆகவே செரிமான மண்டலத்திற்கு எவ்வித பிரச்சனையும் கொடுக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். முக்கியமாக செரிமான மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள் என்னவென்ற தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்த்து, நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வர வேண்டும்.

சரி, இப்போது செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

வெள்ளை பிரட்

சாண்ட்விச் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அந்த சாண்ட்விச்சை கூட மக்கள் கடைகளில் வாங்கி சாப்பிடுகிறார்கள். கடைகளில் விற்கப்படும் சாண்ட்விச்களில் வெள்ளை பிரட் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள அதிகப்படியான குளுட்டன் செரிமான மண்டலத்திற்கு தீங்கை விளைவிக்கும். குறிப்பாக இவை மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்பு போன்றவற்றை அதிகம் ஏற்படுத்தும்.

பாஸ்தா

பாஸ்தாவும் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது. இதில் சுத்திகரிக்கப்பட்ட மாவு பயன்படுத்தப்படுகறிது. இதனால் இதில் எவ்வித ஊட்டச்சத்துக்களும் இல்லை. ஆனால் இதில் குளுட்டன் அதிகமாக உள்ளது. இதனால் உடலில் வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பிடிப்பு, நெச்செரிச்சல் மற்றும் உப்புசம் போன்றவை அதிகம் உண்டாகும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி எளிதில் செரிமானமாகாது. இருப்பினும் கடைகளில் விற்கப்படும் ஹாட்-டாக், சாசேஜ், பர்கர் போன்றவற்றில் மாட்டிறைச்சி சேர்க்கப்படுகிறது. இதனால் அவற்றை உட்கொள்ளும் போது, உடலில் கொழுப்புக்கள் மற்றும் சோடியத்தின் அளவு அதிகமாவதோடு, அதிக அளவில் மாட்டிறைச்சியை உட்கொள்ளும் போது, அவை குடல் புற்றுநோயை உண்டாக்குகிறது.

சாக்லேட்

சாக்லேட் கூட செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் சாக்லேட்டில் காப்ஃபைன் அதிகம் இருக்கிறது. எனவே இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, அவை நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் குடித்து வந்தால், குடலில் புண் ஏற்பட்டு, அதனால் செரிமான மண்டலத்தில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு, அதனால் செரிமான பாதையும் பாதிக்கப்படும்.

காபி

காபியில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள குளுட்டனுக்கு நிகரான புரோட்டீன், மன அழுத்தத்தைத் ஏற்படுத்தும் ஹார்மான்களை தூண்டி, அதனால் நோயெதிர்ப்பு மற்றும் செரிமான மண்டலத்தை பாதிக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்களில் வயிற்று வலியை ஏற்படுத்தும் லாக்டோஸ் அதிக அளவில் உள்ளது. அதற்காக பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால் பால் பொருட்களை அளவாக எடுத்து வர வேண்டும்.

மிளகாய்

என்ன தான் மிளகாய் உணவின் சுவையை அதிகரித்தாலும், அது உணவுக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும்.

பொரித்த அல்லது வறுத்த உணவுகள்

அதிக கொழுப்புக்கள் மற்றும் வறுத்த உணவுகளை உட்கொண்டு வந்தால், மலத்தின் நிறம் மங்கி, செரிமான சரியாக நடைபெறாமல், அமிலம் அதிகம் உற்பத்தியாகி, நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே பர்கர், பிரெஞ்சு ப்ரைஸ், வெண்ணெய் மற்றும் க்ரீம் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சோடா

சோடா ஒரு அசிடிக் பானம். இது உடலின் இயக்கத்தை முற்றிலும் பாழ்படுத்தும். முக்கியமாக செரிமான மண்டலத்தை பெரிதும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

Related posts

உடலுக்கு குளிர்ச்சி தரும் உசிலமரம்

nathan

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

sangika

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமா?

nathan

ஆயுள் முழுவதும் தைராய்ட் மாத்திரை சாப்பிட தேவையில்லை

nathan

உதட்டில் உண்டாகும் பருக்களை போக்க எளிய வீட்டு குறிப்புகள்! தீர்வை காணலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெற்றோராக தயாராகி கொண்டிருபவர்களுக்கான சில முக்கியமான டிப்ஸ்…

nathan

பெண்களே கூர்மையான அறிவாற்றல் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை முயற்சி செய்யுங்கள்…

nathan

வாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

ஆரோக்கியத்தை பாதிக்கும் ஊறுகாய்

nathan