18 masala tea
ஆரோக்கிய உணவு

சூப்பரான புத்துணர்ச்சியூட்டும் மசாலா டீ

குளிர்காலத்தில் மாலை வேளையில் சூடாக மசாலா டீ செய்து குடிக்க சூப்பராக இருக்கும். ஆனால் அத்தகைய மசாலா டீயை கடைக்கு சென்று தான் வாங்கி குடிப்போம். ஏனெனில் மசாலா டீ எப்படி செய்வதென்று பலருக்கு தெரியாது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மசாலா டீயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி செய்து மாலை வேளையில் குடித்தால், குளிருக்கு இதமாக இருப்பதுடன், மனதை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.

இது தொடர்பான வீடியோ…

Refreshing Masala Chai Recipe
தேவையான பொருட்கள்:

பால் – 3/4 டம்ளர்
தண்ணீர் – 1/2 டம்ளர்
டீ தூள் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு

மசாலாவிற்கு…

மிளகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த இஞ்சி – 1
ஏலக்காய் – 2 (தட்டியது)
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 1-2

செய்முறை:

முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விட வேண்டும்.

பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் தீயை குறைத்து, சர்க்கரை மற்றும் 2 டீஸ்பூன் மசாலா பொடியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி பரிமாறினால், மசாலா டீ ரெடி!!!

Related posts

இயற்கை தரும் கோடை பாதுகாப்பு வெள்ளரிக்காய்

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

நீங்கள் காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க!அப்புறம் என்ன நடக்குமென்று பாருங்கள்..

nathan

நீங்கள் அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க…

nathan

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல்

nathan

உங்களுக்கு தெரியுமா 10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா?

nathan

பாத்தா ஷாக் ஆவீங்க வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா?

nathan

ஃபுட் பாய்சன் இலிருந்து பாதுகாத்துக்கொள்ள இவைகளைச் செய்தாலே ? போதும் உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம். …

sangika