35 C
Chennai
Thursday, May 23, 2024
05 brinjal sambar
சமையல் குறிப்புகள்

சுவையான கத்திரிக்காய் சாம்பார்

பெரும்பாலான வீடுகளில் வெள்ளிக்கிழமை வந்தாலே சாம்பார், பொரியல், வடை என்று கமகமக்க சமைத்து மதிய வேளையில் சாப்பிடுவது வழக்கம். அதிலும் ஏதேனும் பண்டிகை என்றால் சொல்லவே வேண்டாம். இன்று கார்த்திகை தீபம் என்பதால், பலர் காலையில் இருந்து வீட்டை சத்தம் செய்து, சமைக்க நேரம் கூட இல்லாமல் இருப்பார்கள்.

ஆகவே மதிய வேளையில் மிகவும் ஈஸியாகவும், சுவையாகவும் ஒரு சாம்பார் செய்ய நினைத்தால் கத்திரிக்காய் சாம்பார் செய்யுங்கள். வேண்டுமானால் இந்த சாம்பாருடன் முருங்கைக்காயும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அந்த கத்திரிக்காயை சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Brinjal Sambar Recipe
தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 4 (நறுக்கியது)
துவரம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
புளி – 1 நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு கத்திரிக்காய் வேகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் சாம்பார் ரெடி!!!

Related posts

சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

கீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது?….

sangika

சுவையான சப்பாத்தி நூடுல்ஸ்

nathan

சுவையான கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலா

nathan

சத்தான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

sangika

முட்டை சால்னா

nathan

சுவையான திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணி

nathan

இஞ்சி குழம்பு

nathan