32.5 C
Chennai
Sunday, May 19, 2024
அறுசுவைசைவம்

வரகு அரிசி புளியோதரை

1-DSCN2153தேவையான பொருட்கள்;

வரகு அரிசி – 1 கப்
புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
வேர்க்கடலை – சிறிதளவு

வறுத்து அரைக்க :

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
தனியா – 2 ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்

செய்முறை :

• வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து வைத்து கொள்ளவும்.

• வரகு அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

• கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் (எண்ணெய் ஊற்ற கூடாது)அதில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.

• புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

• நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது அரைத்து வைத்துள்ள மசாலா பவுடரை போட்டு 2 நிமிடம் கிளறவும்.

• கடைசியாக வேர்க்கடலை, வரகு அரிசியை போட்டு கிளறி இறக்கவும்.

• தினமும் சிறு தானியங்களில் இவ்வாறு உணவுகளை செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

Related posts

வாழைக்காய் பொரியல்

nathan

பார்லி வெஜிடபிள் புலாவ்

nathan

சுவையான தீயல் குழம்பு

nathan

கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

சத்தான சுவையான அரைக்கீரை குழம்பு

nathan

தேங்காய்ப்பால் வெஜ் பிரியாணி

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

எக் நூடுல்ஸ்

nathan

கொப்பரி பப்பு புளுசு

nathan