ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…இருபது வயதுகளில் பெண்கள் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!!

பொதுவாக அனைவரும் தம்மை அறியாமல் பல தவறுகளை சிறு வயது என்று சொல்லும் இருபது வயதுகளில் தான் செய்வோம். ஏனெனில் இந்த வயதில் அனைவருக்கும், நாம் பெரிய ஆளாகிவிட்டோம் என்ற எண்ணம் எழும். இதனால் யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம். நம் மனம் சொல்வதை மட்டும் தான் செய்வோம். மேலும் இந்த வயதில் உடல் மற்றும் மனம் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.

குறிப்பாக டீனேஜ் பருவம் முடிந்து அடுத்த பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, மனதில் தோன்றும் முதல் எண்ணம், நான் ஒரு சுதந்திரப் பறவை என்பது. இக்காலத்தில் நண்பர்கள் மிகவும் முக்கியமானவர்களாக இருப்பர். பெற்றோர்கள் எதையும் செய்ய விடாமல் தடுக்கும் எதிரிகளாக இருப்பது போல் இருக்கும்.

மேலும் இந்த பருவத்தில் எண்ணற்ற தவறுகளை செய்ய நேரிடும். அதிலும் அத்தகைய தவறுகளை சற்று பெரியவர்களான பின்னர் நினைக்கும் போது, அவற்றில் சில வருத்தப்பட வைப்பவையாகவும், சில நகைச்சுவையாகவும் இருக்கும். இப்போது டீனேஜ் பருவம் முடிந்து அடுத்த பருவத்தில் காலடி வைக்கும் போது, பெண்கள் செய்யக்கூடிய சில பொதுவான தவறுகளை கொடுத்துள்ளோம்.

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களான ஃபேஸ் புக், ட்வீட்டர் போன்றவற்றில் எந்நேரமும் இருப்பது. இதனால் தேவையில்லாத நபர்களிடம் நட்புறவு கொண்டு, பின் பிரச்சனையில் சிக்கிக் கொள்வது.

இரவில் தூக்கத்தை தொலைப்பது

டீனேஜ் பருவம் முடிந்து அடுத்த பருவத்தில் காலடி வைக்கும் போது, இரவில் சரியாக தூங்காமல், காரணமே இல்லாமல் ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்வது.

காதலில் விழுவது

பெண்களை எளிதில் காதலில் விழும் காலம் தான் இருபது வயது. இந்த விவரம் தெரியாத இருபது வயதில் பெண்கள் காதலில் விழுந்து, இறுதியில் காதல் முறிவடையும் போது தான் தவறை உணர்வார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கெட்ட பழக்கங்கள்

இன்றைய மார்டன் உலகில் ஃபேஷன் என்ற பெயரில் பெண்கள் கூட சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது என்றெல்லாம் செய்கிறார்கள். அதிலும் இந்த பழக்கம் விவரம் தெரியாத இருபது வயதில் தான் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

தவறுகள் செய்வது

இந்த வயதில் கட்டுப்பாட்டில் இருப்பது சற்று கடினமானது. அந்த கட்டுப்பாடு இல்லாவிட்டால், எளிதில் தவறுகளை செய்ய நேரிடும். ஏனெனில் இந்த காலத்தில் ஆசை, காம உணர்ச்சி போன்றவை அளவுக்கு அதிகமாக இருக்கும்.

சாப்பிடாமல் இருப்பது

குண்டாகிவிடக்கூடாது என்று ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யும் ஒரு செயல் தான் சாப்பிடாமல் இருப்பது. இவ்வாறு சாப்பிட வேண்டிய காலத்தில் ஒழுங்காக சாப்பிடாவிட்டால், பின் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், பிற்காலத்தில் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

அனைவரையும் நம்புவது

20 வயதுகளில் அனைத்து பெண்களும் செய்யும் ஒரு தவறு தான், அனைவரையும் கண்மூடித்தனமாக நம்புவது. யார் என்ன சொன்னாலும், அதை நம்பி அதற்கேற்றாற் போல் நடந்து கொண்டு, பின் வருத்தப்படுவார்கள்.

வெளியே சாப்பிடுவது

இந்த வயதில் வீட்டு சாப்பாடு சாப்பிட பிடிக்காது. மாறாக நண்பர்களுடன் வெளியே சென்று கண்ட கண்ட உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button