30.6 C
Chennai
Wednesday, May 15, 2024
9d35911f 9b
இனிப்பு வகைகள்

சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜாமூன் என்றால் அனைவருக்கும் அதீத பிரியம் இருக்கும். சுவையாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்

சர்க்கரை – முக்கால் கிலோ

மைதா – முக்கால் கப்

நெய் – கால் கப்

தண்ணீர் – 1 கப்

எண்ணெய் – அரை லிட்டர்

செய்முறை விளக்கம்

முதலில் கடினமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்து வந்ததும் சிறு தீயில் வைத்து அடியில் பிடிக்காமல் கிளறவும்.

அடுத்து, பால் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை கிளறவும். பின்னர் இறக்கி ஆறவைத்து அதில் மைதா, நெய் சேர்த்து லேசாக பிசையவும்.

அதைத்தொடர்ந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து பாகு பதத்துக்கு காய்ச்சிக் கொள்ளவும்.

பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

பொரித்த உருண்டைகளை காய்ச்சிய பாகுவில் ஊற வைத்து ருசிக்கலாம். இப்போது சுவையான தித்திக்கும் கோவா ஜாமூன் ரெடி.

Related posts

மில்க் ரொபி.

nathan

சுகர் குக்கீஸ் வித் ஐஸிங்

nathan

சுவையான அன்னாசிப்பழ புட்டிங்..

nathan

மைசூர் பாக்

nathan

பனை ஓலை கொழுக்கட்டை

nathan

இனிப்பு சக்க பிரதமன்

nathan

தித்திக்கும்… தினை பணியாரம்

nathan

வெல்ல பப்டி

nathan

சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை

nathan