32.8 C
Chennai
Sunday, May 19, 2024
19 1432022277 chicken salna
அசைவ வகைகள்

சிக்கன் சால்னா: பேச்சுலர் ரெசிபி

பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு தான் சிக்கன். இந்த சிக்கனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் சிக்கன் சால்னா. சால்னா என்பது வேறு ஒன்றும் இல்லை, குழம்பைத் தான் அப்படி சொல்வார்கள்.

இங்கு மிகவும் ருசியாக இருக்கும் சிக்கன் சால்னாவை சிம்பிளாக எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!


19 1432022277 chicken salna
தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

வறுத்து அரைப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
பட்டை – 2 இன்ச்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 5
கிராம்பு – 5
தேங்காய் – 1 கப் (துருவியது)
கசகசா – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் அதில் வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, சிக்கனையும் சேர்த்து, மசாலா சிக்கனுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயை குறைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, குக்கரை இறக்கி வைக்க வேண்டும்.

பின் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கிளறி, 10-15 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் சால்னா ரெடி!!!

Related posts

சுவையான முட்டை குருமா செய்வது எப்படி

nathan

சூப்பரான இறால் தொக்கு செய்ய

nathan

நாட்டுக்கோழி மசாலா

nathan

கோங்குரா சிக்கன்

nathan

முட்டை கொத்து பரோட்டா (Muttai Kothu Parotta)

nathan

ப்ரைடு சிக்கன்

nathan

ருசியான… சிக்கன் பக்கோடா

nathan

நாட்டு ஆட்டு குருமா

nathan

செட்டிநாடு மிளகு கோழி வறுவல்: ரமலான் ஸ்பெஷல் ரெசிபி

nathan