30.8 C
Chennai
Saturday, May 25, 2024
sl3522
கேக் செய்முறை

பலாப்பழ கேக்

என்னென்ன தேவை?

மைதா மாவு -ஒரு கப்,
அரிசி மாவு -1 கப், சோயா
மாவு -அரை கப்,
சர்க்கரை -3 கப்,
தேங்காய் துருவல் -1 கப்,
மில்க் மெய்ட் -அரை கப் அல்லது சுண்டிய பால் -அரை கப்,
பொடித்த முந்திரி -கால் கப்,
திராட்சை -1 கப்,
ஏலக்காய் தூள் -கால் டீஸ்பூன்,
நெய் -2 கப்,
பலாச்சுளை -10, அலங்கரிக்க செர்ரிப்பழங்கள்.
எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு எல்லா மாவையும் தனித் தனியாக வறுக்கவும். தேங்காய் துருவல், திராட்சை பொடித்த முந்திரி மூன்றையும் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். வறுத்து வைத்துள்ள மாவுகளை தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதம் வரும்படி கரைக்கவும்.பலாச்சுளைகளை பொடியாக நறுக்கி அல்லது நைஸாக அரைத்து மாவுடன் சேர்க்கவும். ஒரு கடாயில் மீதி உள்ள நெய் விட்டு காய்ந் ததும் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றிக் கிளறவும். கிளறும்போது சர்க்கரை, சுண்டிய பால் அல்லது மில்க் மெய்ட் சேர்த்து கிளறி சுருண்டு வரும்போது தேங்காய், ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி செர்ரிப்பழங்களை சேர்க்கவும். ஆறியதும் துண்டுகளாக போடவும்.

sl3522

Related posts

அரிசி மாவு கேக்

nathan

புளிக்கூழ் கேக்

nathan

குழந்தைகளுக்கான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக்

nathan

சாக்லெட் பிரெளனி

nathan

தேங்காய் கேக்

nathan

உலர் பழ கேக் (Dry Fruit Cake)

nathan

முட்டை பப்ஸ் – Egg Puffs

nathan

ஈஸி சாக்லேட் கேக் : செய்முறைகளுடன்…!

nathan

மைதா  ஃப்ரூட்  கேக்

nathan