கை பராமரிப்பு

குளிர் காலத்தில் கைகளின் வறட்சியைப் போக்கும் மசாஜ்

இதனால் குளிர்காலத்தில் கைகளில் அதிகப்படியான குளிர்ச்சியான காற்று பட்டு, அதனால் கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். இதனைத் தடுக்க வேண்டுமானால், குளிர்காலத்தில் கைகளுக்கு போதிய பராமரிப்புக்களை வழங்க வேண்டியது அவசியம். இப்போது கைகளின் வறட்சியைப் போக்க சில அற்புத வழிகள் பார்க்கலாம்.

* குளிர்காலத்தில் ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.

* மில்க் க்ரீம் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். மில்க் க்ரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செரும செல்கள் உருவாக வழிவகுக்கும்.

* குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.

* கண்ட க்ரீம் மாய்ஸ்சுரைசர்களை கை, கால்களுக்கு தேய்ப்பதற்கு பதிலாக, தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.

dd3a4c38 57c8 474b a6da cdf596c5f123 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button