சிற்றுண்டி வகைகள்

வாழைப்பழம் கோதுமை தோசை

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் : 1
கோதுமை மாவு : 1/2 கப்
அரிசி மாவு : 1 ஸ்பூன்
ரவை : 1/4 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி : 1/3 கப்
ஏலக்காய் தூள் : 1/4 ஸ்பூன்
உப்பு : 1 சிட்டிகை
எண்ணெய் / நெய் : தேவையான அளவு

செய்முறை :

• ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைப் பழத்தை துண்டுகளாக்கி கையாலோ அல்லது மத்தாலோ நன்கு மசித்து விடவும்.
4c8ef465 f677 45a6 b48a 5d519b7d18d8 S secvpf
• அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை நசுக்கி போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறியவுடன் வடிகட்டி வாழைப்பழத்துடன் சேர்க்கவும். மற்ற மாவையும் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் எண்ணெய் தடவி மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

• சுவையான வாழைப்பழம் கோதுமை தோசை ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button