32.8 C
Chennai
Sunday, May 19, 2024
uytiyio
தலைமுடி சிகிச்சை

அடிக்கடி முடி அலசுவது உங்கள் முடியின் எண்ணெய் பசையைக் குறைத்து அதனை வறட்சியாக்கும்.தெரிஞ்சிக்கங்க…

நாம் அடிக்கடி தலை முடியை அலச வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து உருவாகலாம்.

இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். சில நேரங்களில் இது வானிலை மாற்றத்தாலும், முடி மிகவும் பிசுபிசுப்பாக எண்ணெய் பசையுடன் காணப்படுவதாலும் அதை அலசவேண்டியிருக்கலாம்.

இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் உங்கள் முடி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது கூட உங்களுக்குத் தெரிவதில்லை. இங்கு அடிக்கடி தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம்.

அதிகம் முடியை அலசுவதால். அது உங்கள் முடியை அதிகம் உதிரச்செய்யும். ஏனென்றால் ஈரமான முடியின் வேர்க்கால்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால் உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அடிக்கடி முடி அலசுவது உங்கள் முடியின் எண்ணெய் பசையைக் குறைத்து அதனை வறட்சியாக்கும். உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய்ப்பசை அவசியம்.

எண்ணெய் பசை குறைந்தால் முடியின் நுனிகளில் பிளவு ஏற்படும். பிளவு முடி அதன் வளர்ச்சியை குறைக்கும். எனவே தினமும் தலையை அலசுவதை தவிருங்கள். 4. முடியை அடிக்கடி அலசுவதால் சரும வறட்சி ஏற்பட்டு பொடுகு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது அதிக அளவிலான முடி உதிர்விற்கு வகுக்கும். மேலும், பொடுகின் உதிர்ச்சியால் முக பரு போன்ற சரும பிரச்சனைகளும் ஏற்படும்.

அதிகம் முடியை அலசுவதால் முடி இழுவை ஏற்படலாம் அல்லது பலவீனமடையலாம். இதனால் முடியின் நடுப்பகுதியில் உடைந்து விட வாய்ப்புண்டு. இதை தவிர்க்கவும் நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிருங்கள்.

Related posts

உங்களுக்கு பேன் தொல்லை இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்!

nathan

எண்ணெய்ப் பசையான கூந்தல்

nathan

சில் கிளைமேட்டில் கூந்தல் பராமரிப்பு

nathan

தலையில் புண்கள் மற்றும் கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

நரை முடி இருந்தால் என்னவெல்லாம் செய்யக்கூடாது?

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்தை பொலிவாக்க பேஷியல் செய்ய குளிர்காலம் மிகவும் ஏற்றது

nathan

பொடுகை விரட்ட வேப்பம்பூ

nathan

தலைமுடி பராமரிக்கும் முறை

nathan