9 kovakkai poriyal
சமையல் குறிப்புகள்

சுவையான கோவைக்காய் பொரியல்

கோவைக்காயைப் பார்த்தாலே பலருக்கு அதைப் பிடிக்காது. ஏனெனில் அதை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாதது தான் காரணம். ஆனால் கோவைக்காயை சமைத்து சுவைத்தவர்களைக் கேட்டால், அதைத் தான் தன் பிரியமான காய்கறி என்று சொல்வார்கள். அந்த அளவில் கோவைக்காய் மிகவும் சுவையாக இருக்கும்.

சரி, இப்போது அந்த கோவைக்காயைக் கொண்டு எப்படி பொரியல் செய்வதென்று பார்ப்போம்…

Kovakkai Poriyal
தேவையான பொருட்கள்:

கோவைக்காய் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தக்காளி – 1 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
சோம்பு – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி, சோம்பு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட் சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் காய்கறியை சேர்த்து, 2 நிமிடம் மசாலா காய்கறியுடன் ஒன்று சேர நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, காய்கறி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, காய்கறி நன்கு வெந்ததும், தண்ணீர் வற்ற நன்கு கிளறி விட்டால், கோவைக்காய் பொரியல் ரெடி!!!

Related posts

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்

nathan

சூப்பரான பேபி கார்ன் மஞ்சூரியன்

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

nathan

சுவையான திருச்சி ஸ்டைல் சாம்பார்

nathan

குடைமிளகாய் கறி

nathan

சூப்பரான பீன்ஸ் உருளைக்கிழங்கு அவியல்

nathan

சுவையான சிவப்பு காராமணி குழம்பு

nathan

பேச்சுலர் சாம்பார்

nathan

இட்லி சாப்பிட்டு போரடிக்குதா? இப்படி செஞ்சு சாப்பிடுங்க

nathan