33.3 C
Chennai
Saturday, May 18, 2024
mutton chukka 09 1452336060
அசைவ வகைகள்

மணமணக்கும் மதுரை மட்டன் சுக்கா

மட்டன் உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் மட்டனை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அதிலும் விடுமுறை நாட்களில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

இங்கு மதுரை மட்டன் சுக்காவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


mutton chukka 09 1452336060
தேவையான பொருட்கள்:

மட்டன் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 1/4 கப்
பூண்டு – 10 பற்கள்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

சோம்பு – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால், மதுரை மட்டன் சுக்கா ரெடி!!!

Related posts

லெமன் ஃபிஷ் ஃப்ரை… இதுவரை மீனை இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..!

nathan

சிக்கன் மன்சூரியன்

nathan

சமையல் குறிப்பு- ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்.)

nathan

வஞ்சரம் மீன் குழம்பு

nathan

காஷ்மீரி ஸ்டைல் மட்டன் ரோகன் ஜோஸ்

nathan

சுவையான ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

ருசியான மொகல் சிக்கன் செய்வது எப்படி

nathan

சுவையான சிக்கன் பெப்பர் ப்ரை

nathan

காரைக்குடி கோழி குழம்பு செய்முறை விளக்கம்

nathan