27.8 C
Chennai
Saturday, May 18, 2024
3f38e9fb 79c0 44a5 a58b 5f08970b9f65 S secvpf
இனிப்பு வகைகள்

பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானப் பொருட்கள்:

பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு – 3 கப்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் – 2 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1 கப்

செய்முறை:
3f38e9fb 79c0 44a5 a58b 5f08970b9f65 S secvpf
• கருப்பட்டியில் அரை கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

• பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

• ஒரு ஓலையை விரித்து நடுவில் சிறிது மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மற்றொரு ஓலையால் மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.

• இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

• சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும்.

• இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்.

Related posts

தீபாவளி ரெசிபி வேர்க்கடலை லட்டு

nathan

சுகர் குக்கீஸ் வித் ஐஸிங்

nathan

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan

இத்தாலியன் ஹாட் சாக்லேட்

nathan

கோதுமை அல்வா

nathan

சுவையான அன்னாசிப்பழ புட்டிங்..

nathan

சீக்ரெட் ரெசிபி – சோன் பப்டி

nathan

சுவையான பானி பூரி

nathan

தீபாவளி ஸ்பெஷல்: மைசூர் பாகு

nathan