22 6292f2d62f7c2
ஆரோக்கிய உணவு

கீரை வகைகளும் அதை சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத பயன்களும்!

கீரையில் பல வகைகள் உள்ளன. அடிக்கடி கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது.

கீரை வகைகளையும், அதில் அடங்கியுள்ள சத்துக்களால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம்.

முருங்கை கீரை: முருங்கை கீரை கசப்பு தன்மை கொண்டது. முருங்கைக் கீரை சத்தான உணவு. முருங்கை கீரையில் வைட்டமின் ஏ,பி,சி புரதம், இரும்புச் சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. முருங்கை கீரை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால் அசதி நீங்கும்.

அகத்தி கீரை: அகத்தி கீரையை தொடர்ந்து வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொண்டால் ரத்தக் கொதிப்பு, மூலம் பித்த கோளாறுகள் தீரும். பல மருந்துகளை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க அகத்தி கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். அகத்தி கீரை சாப்பிடும் போது இறைச்சி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சிலருக்கு அலர்சி உண்டாகலாம்.

கீரை வகைகளும் அதை சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத பயன்களும்! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதியம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

தண்டுக்கீரை: மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண அந்த நோய் குணமாகும். இந்த கீரையை அடிக்கடி உட்கொண்டால் நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

அரைக்கீரை: அரைக்கீரையுடன் வெங்காயம் சேர்த்து நெய்யில் பொரித்து சாப்பிட்டு வந்தால் புதுரத்தம் ஊறி தாது அணுக்கள் உற்பத்தியாகும்.

மூக்கிரட்டை கீரை: மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டினை சாப்பிட்டு வருவதால் சிறுநீரகங்களின் உருவாகும் கற்கள் மற்றும் சிறுநீரக தொற்றுநோய்கள் வருவதை தடுத்து நிறுத்தும்.

Related posts

கொடுக்காப்புளி யின் மருத்துவ பயன்கள்

nathan

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி

nathan

உங்களுக்கு தெரியுமா தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..?

nathan

கறிவேப்பிலைப் பொடி

nathan

கலப்பட பொருட்களை அறிந்து கொள்ளுங்கள்

nathan

சுவையான உடலுக்கு வலுசேர்க்கும் மாதுளை – பீட்ரூட் சூப்..

nathan

தெரிஞ்சிக்கங்க…காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan

A Glass of Milk – Paid In Full (True Story of Dr. Howard Kelly) ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் …

nathan