32.8 C
Chennai
Sunday, May 19, 2024
22 629b2bf9a6646
Other News

தண்ணீர் பழத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா?தெரிந்துகொள்ளுங்கள் !

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை மக்கள் அடிக்கடி வாங்கி உட்கொள்வது வழக்கம். இது உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. கோடையில் மிகவும் விரும்பப்படும் பழங்களில் தர்பூசனியின் பெயர் முதலில் வருகிறது.

தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது கோடையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து போன்ற பல சத்தான கூறுகள் இதில் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துவதால் உடல் எடையைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் பெரும்பாலானவர்கள் தர்பூசணி பழத்தை வாங்கிய பிறகு அதை வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைப்பதால் உடலுக்கு பல பிரச்சனைகள் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஊட்டச்சத்து கூறு குறைகிறது
தர்பூசணியின் வெளிப்புறப் பகுதி (தோல்) மிகவும் தடிமனாக இருப்பதால், அது விரைவில் கெட்டுப் போகாது.

ஆகையால் தர்பூசணியை குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை சுமார் 15-20 நாட்கள் வரை வெளியே வைத்திருக்கலாம்.

அப்படி தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டுமென்றால், அதை வெட்டாமல் அப்படியே முழுவதுமாக வைக்கலாம். எப்போதும், தர்பூசணியை வெட்டி வைக்க வேண்டாம்.

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்து குறைகிறது. மேலும் அதில் காணப்படும் கரோட்டினாய்டு அளவும் குறைகிறது.

தண்ணீர் பழத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா? அதிர்ச்சி தகவல் இதோ

குளிர்ந்த தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
தர்பூசணி கோடையில் நிவாரணம் தரும் நீர்ச்சத்து நிறைந்த பழம். ஆனால் இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் சத்து குறைகிறது. அதே போல் குளிர்ந்த தர்பூசணி சாப்பிடுவதால் இருமல் மற்றும் சளி வர வாய்ப்பு உள்ளது.

இதனுடன், வெட்டி வைத்த தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைத்து, அதை நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனிங் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிகின்றன.

இதனால், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. ஆகையால், எப்போதும் புதிய பிரஷ்ஷான தர்பூசணியையே சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதாகும்.

Related posts

அதிக பணக்காரர்கள் எந்த ராசிக்காரர்கள்

nathan

சாதித்த மாற்றுத்திறனாளி மாணவி..

nathan

கோடீஸ்வர யோகம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

nathan

மகள்களுடன் இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள புகைப்படம்!

nathan

600 உணவுகளை தயாரித்த இந்தியாவின் முதல் இயந்திர சமையல் மனிதர்!

nathan

மனைவி உடலை அடக்கம் செய்த போது கணவர் உயிரிழப்பு!!

nathan

எதிரிகளை மிரட்டும் “கமல்”.. இந்தியன் 2 படத்திலிருந்து வெளியான போஸ்டர்

nathan

சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan