152889345
ஆரோக்கிய உணவு

முருங்கைப்பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

முருங்கைக்காயின் பூக்களை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி காலையில் ஒரு சொட்டு சொட்டாக சேர்த்து பிரவுன் சுகர் கலந்து குடித்து வர உடல் வலுப்பெறும். உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்க சிறந்தது.

ஒரு பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தமாக கழுவி பசும் பாலில் போட்டுக் காய்ச்சி கற்கண்டு தூள் போட்டு மாலையில் குடித்து வந்தால் உடல் வலுப்பெறும் தாது விருத்தியாகும். முருங்கைப் பூவுடன் முருங்கைப் பிஞ்சை சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வெப்பம் தவிர்த்து ஆண்மை பெருகும்.

கர்ப்பப் பை பிரச்சனை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்சனைகளுக்கு முருங்கை பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனளிக்கும்.

முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போட்டால் வீக்கத்தை கட்டுப்படுத்தும். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று சாப்பிடுவது நல்லது.

முருங்கைப் பூவை இரவு நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சாறை 2 துளிகள் கண்களில் விட கண் வலிகள் நீங்கும். விரை வீக்கம் சுருங்க முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டி வந்தால் நீர் வற்றி வீக்கம் சுருங்கி விடும்.

Related posts

காளானை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது!..

nathan

கோடை வெப்பத்தை சமாளிக்க… தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா வாழைப்பழ தோலை கொதிக்க வைத்த நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா?அப்ப இத படிங்க!

nathan

கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

nathan

சுவையானபலாப்பழ ரெசிபி

nathan

தெரிஞ்சிக்கங்க…நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலிருந்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் சிறந்த சுவை தரும் சூப்பர்ஃபுட்..!!

nathan

சோள ரொட்டி

nathan

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா

nathan

தெரிஞ்சிக்கங்க…கொரோனா சமயத்தில் மிளகு ரசம் சாப்பிடுவது நல்லதா..?

nathan