31.1 C
Chennai
Monday, May 20, 2024
pre 153
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள எது சரியான வயது? தெரிந்துகொள்ளுங்கள் !

குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வது சரியாக இருக்கும் என்று அறிதல் அவசியம். தம்பதியர் சரியான வயதில், சரியான கால கட்டத்தில் கருத்தரித்து குழந்தையை பெற்றுக் கொண்டால் தான் அவர்களால் நல்ல முறையில் குழந்தையை வளர்க்க முடியும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள எது சரியான வயது பற்றி மற்றும் ஆண்கள் எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்டால் நல்லது என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

கருத்தரிக்க வயது அவசியமா?

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இந்த இரு பாலினரும் தங்கள் வாழ்நாளின் சரியான கால கட்டத்தை தேர்வு செய்து, அந்த சமயத்தில் கலவி கொண்டு கருத்தரிக்க முயல வேண்டும்; கலவி இல்லாவிட்டாலும் மறுத்து மற்றும் அறிவியல் முறைகள் மூலம் கருத்தரித்து குழந்தையை பெற்று கொள்ள முயலுதல் வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ள சரியான வயது மற்றும் நேரம் என்பது மிகவும் அவசியம்.!

வயது அதிகமானால்..!

ஆணுக்கும் சரி பெண்ணும் சரி வாழ்நாளில் வயது குறைந்திருந்தாலும் கருத்தரிப்பில் பிரச்சனை ஏற்படும்; வயது அதிகமானாலும் கருத்தரிக்க கடினமாக இருக்கும். பெண்கள் மற்றும் ஆண்கள் வயது வந்த 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக கருத்தரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்த 10 அல்லது 12 ஆண்டுகளை கடந்து 30 வயதை எட்டும் பொழுதோ அல்லது 40 வயதை எட்டும் பொழுதோ கருத்தரிக்க முயன்றால், கருமுட்டைகள் தீர்ந்து போதல், வயதாகல் காரணமாக ஏற்படும் குறைபாடுகள் கருத்தரிப்பு நிகழாமல் தடுக்கலாம்.

சரியான வயது எது?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் உடல் வேறுபாடுகளால், அவர்கள் கருத்தரிக்க ஏதுவான, சரியான காலம் என்பது மாறுபடலாம். பெண்கள் பிறக்கும் பொழுது கொண்டு வந்த கருமுட்டைகள் தீர்ந்து போகும் முன் கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும்.

இதுவே ஆண்களுக்கு 40 அல்லது 50 வயது வரை கூட கருத்தரிக்க முயற்சிக்கலாம்; ஆனால் அவர்களின் விந்து அணுக்களை அந்த வயது வரம்பு வரை ஆண்கள் மிகவும் சரியாக கவனித்து பராமரித்து வந்து இருக்க வேண்டும்.

பொதுவான சரியான வயது!

என்ன தான் ஆணுக்கு 50 வயது வரை அல்லது சாகும் வரை விந்து அணுக்களின் உற்பத்தி தொடர்ந்து நடந்து வந்தாலும் ஆண்களின் 23 முதல் 30 வயது வரையிலான கால கட்டத்தில் விந்து அணுக்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஆரோக்கியம் ஆண்களின் பழக்க வழக்கத்தை பொறுத்தது தான்; இளவயதிலேயே ஆண்கள் குடி, மது என்று இருந்தால் விந்து அணுக்களின் ஆரோக்கியம் ஒரு பெரிய கேள்விக்குறியே!

 

 

பெண்களுக்கு கருத்தரிக்க!

பெண்கள் கூட எந்த ஒரு தவறான பழக்க வழக்கமும், உடலுக்கு கேடு விளைவிக்கும் செயல்பாடுகளும் இல்லாமல் இருந்தால், 25 வயது முதல் 30 வயதில் கருத்தரிக்கலாம்; இந்த வயதில் பெண்களின் உடல் சரியான நிலையில் இருக்கும்; அண்ட முட்டைகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதுவே வயது அதிகமாகி கொண்டே போனால், பெண்கள் உடலில் உள்ள கருமுட்டைகள் தீர்ந்து பெண்களால் கருத்தரிக்க முடியாத சூழல் மற்றும் கருப்பை பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.!

30-45 வயதிற்கு மேல்!

பல ஆண்களும் பெண்களும் குடும்ப சூழல், சம்பாதிப்பு, வேலை தொடர்பான விஷயங்கள், சாதனைகள், தனிப்பட்ட பிரச்சனைகள் போன்ற காரணங்கள் காரணமாக 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு வாழ்வர்; அப்படி திருமணம் முடிந்து இந்த தம்பதியர் கருத்தரிக்க முயற்சி மேற்கொள்ளும் பொழுது அந்த தம்பதியருக்கு வயது 35 முதல் 45 வயது என்றாகி விடும்.

இத்தனை ஆண்டுகள் கழித்து முயன்று குழந்தை பெற்று கொண்டாலும், அந்த குழந்தையின் வளர்ச்சியில் சரியான பங்களிப்பை பெற்றோர்களால் அளிக்க முடியாது.

குழந்தை பார்த்துக் கொள்ளும்..!

பெற்ற குழந்தையை பெற்றோர்கள் பேணிக்காத்து வளர்க்க வேண்டியதற்கு பதிலாக, நீங்கள் பெற்று எடுத்த குழந்தை பெற்றோரான உங்களை சிறு வயது முதலே பார்த்துக் கொள்ள வேண்டி வரும்; இவ்வாறு வயதான பெற்றோர்களால், பிள்ளைகளுடன் ஆடி, ஓடி விளையாட முடியாது மற்றும் படிப்பில் கூட உதவ முடியாத நிலை ஏற்படலாம். குழந்தைகள் தனது வயதான பெற்றோரை எண்ணி மனஅழுத்தம் மற்றும் மனவருத்தம் அடையலாம்.

சிந்தித்து செயலாற்றுங்கள்!

ஆகையால் தோழர்களே! வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சரி அதனை துணிவோடு எதிர்த்து போராடி சமாளித்து விடலாம் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்; வாழ்வில் வரும் பிரச்சனைகளை எண்ணி உங்கள் வாழ்க்கையை தொடங்க நாட்களை கடத்தாதீர்கள்; அப்படி கடத்தினால், நாள்கள் சென்ற பின் தொடங்கிய வாழ்க்கையிலும் பிரச்சனைகள் மட்டுமே நிறைந்து இருக்கும்.

சரியான வயதில் சரியான முடிவை எடுத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்! வாழ்வில் வரும் பிரச்சனைகளையும் புன்னகை நிறைந்த முகத்துடன் எதிர்கொள்ளுங்கள்! எல்லாம் நலமாக நடக்கும்! வாழ்க வளமுடன்!

Related posts

மது அருந்திவிட்டு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?

nathan

எந்த சுகாதார பிரச்சனையும் இல்லாமல் வாழ வேண்டுமா?பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வயிற்றில் கரு உண்டாகும்போது பிறப்புறுப்பில் என்ன மாதிரியான மாற்றம் நிகழும்?…

nathan

குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே! …..

sangika

எப்படி கொடுக்கலாம்? குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் ?

nathan

எலுமிச்சை சாறில் இதை சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. அபார்ஷன் செய்தால் ஏற்படும் விளைவுகள்

nathan

தொப்பையை குறைக்க இவைகள் தான் சிறந்த வழிகள்

nathan