28.6 C
Chennai
Tuesday, May 21, 2024
egg malai masala 1
ஆரோக்கியம் குறிப்புகள்

முட்டை மலாய் மசாலா

உங்களுக்கு முட்டை மலாய் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மலாய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெண்ணெய் – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* முட்டை – 4

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

* பால் – 1 1/2 கப்

* பிரஷ் க்ரீம் – 1/4 கப்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

அரைப்பதற்கு…

* வெங்காயம் – 4

* பச்சை மிளகாய் – 2

மசாலா பொடிகள்…

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முட்டையை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

* பின் மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றம் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின்பு அதில் வெங்காய விழுது சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மசாலா பொடிகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் பாலை ஊற்றி, வேண்டுமானால் சிறிது நீரை சேர்த்து கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்னர் மூடியைத் திறந்து, அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக வெட்டி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, மேலே மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கி, மூடியைத் திறந்து கிளறினால், சுவையான முட்டை மலாய் மசாலா தயார்.

Related posts

ஆண்கள் சாதாரணமாக நினைக்கக்கூடாத சில ஆரோக்கிய பிரச்சனைகள்!!!

nathan

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மின்சாதனங்களின் பயன்பாடும்.. சிக்கனமும்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பச்சிளம் குழந்தையை குளிக்க வைக்கும் முறை

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை கிடுகிடுனு குறைக்கும் கருப்பு உருண்டை!

nathan

குழந்தைகளை குறிவைக்கும் போதை சாக்லெட்…உஷார்…

nathan

குழந்தையின் ஜாதகம் பெற்றோருக்கு எப்போது பலன் தரும்? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வாதம் போக்கும், சூடு தணிக்கும்… கோரை, ஈச்சம் பாய் நல்லது!

nathan

எப்படி கொடுக்கலாம்? குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் ?

nathan

புரிந்து கொள்ள முடியாத பெண்களின் விசித்திர நடவடிக்கைககள்!!!

nathan