பெண்கள் மருத்துவம்

டாம்பன் உபயோகிக்கலாமா?

சகல விஷயங்களிலும் மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றவிரும்புகிறார்கள் இன்றைய இளம் பெண்கள். அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் டாம்பன் உபயோகிப்பது. மாதவிலக்கு நாட்களின் போது உபயோகிக்கிற நாப்கின்களுக்கு மாற்று இது.

சானிட்டரி நாப்கினை போல இது தட்டையாக இல்லாமல், உருளை வடிவில், உறுப்பினுள் செருகிக் கொள்ளும்படி இருக்கும். மேலை நாடுகளில் திருமணத்துக்கு முன்பான செக்ஸ் சகஜம் என்பதால் அங்குள்ள பெண்கள் டாம்பன் உபயோகிக்கத் தயங்குவதில்லை.

நம்மூரில் சமீப காலம் வரை அதிகம் புழக்கத்தில் இல்லாமலிருந்த டாம்பன், மேல் தட்டுப் பெண்கள் மத்தியில் மெதுவாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது.டாம்பன் உபயோகிப்பதில் உள்ள சாதக, பாதகங்கள், உபயோகிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்கிறார் மருத்துவர் நிவேதிதா.

”டாம்பன் என்பது பஞ்சு உருளை போன்று இருக்கும். மாதவிலக்கின் போது, இதை பெண்ணுறுப்பினுள் செருகிக் கொள்ள வேண்டும். சாதாரண சானிட்டரி நாப்கின் உபயோகிக்கும் போது, ரத்தப் போக்கு அதிகமாகி, நாப்கின் நனைந்து விட்டால், ரத்தக் கசிவு வெளியே வரும். ஆனால், டாம்பனில் அந்தப் பிரச்னை இல்லை. வெளியேறும் ரத்தம் முழுவதையும் அது உறிஞ்சிக் கொள்ளும்.

திருமணமாகாத பெண்கள் இதை உபயோகிப்பது குறித்து நம்மூரில் ஒரு தயக்கம் நிலவுகிறது. டாம்பன் உபயோகித்தால் கன்னித்தன்மை பாதிக்கப்படுமா என்பதே பலரின் கேள்வியும். டாம்பன் என்பது சின்ன சைஸ் மெழுகுவர்த்தி போன்றுதான் இருக்கும். அதை உபயோகிப்பதால் கன்னி சவ்வு கிழிய வாய்ப்பில்லை. தவிர, தரமான நிறுவனத்தயாரிப்புகளை உபயோகிக்கிற போது, இந்த பயம் தேவையில்லை.

நாப்கின் உபயோகிக்கிற போது செய்ய முடியாத நீச்சல் போன்ற சில வேலைகளை, டாம்பன் உபயோகிக்கும் போது செய்ய லாம். டாம்பனை அகற்றாமல் குளிக்கலாம். சிறுநீர் கழிக்கலாம். எந்தஅசவுகரியமும் இருக்காது.இத்தனை நன்மைகள் இருந்தாலும், டாம்பன் உபயோகிக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

*பூப்பெய்திய பிறகுதான் டாம்பன் உபயோகிக்கத் தொடங்க வேண்டும்.
* மிகக் குறைவான ரத்தப் போக்கு அல்லது ரத்தத் திட்டுகளுக்கு டாம்பன் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
* உறுப்பினுள் அதை சரியாகப் பொருத்திக் கொள்ளப் பழக வேண்டும். சரியாகப் பொருத்தாதபோது, நடக்கும் போதும், நிற்கும் போதும் கால்களுக்கு இடையில் ஒருவித
தர்மசங்கடத்தை உணர்வார்கள்.
* நாப்கினை போல இது நனைந்து, புதிய நாப்கின் மாற்ற வேண்டிய அவசரத்தை உணர்த்துவதில்லை என்பதால், பல மணி நேரத்துக்கு உள்ளே இருக்க வாய்ப்புண்டு. அது மிகவும் தவறு. குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு ஒரு முறை டாம்பனை மாற்ற வேண்டியது அவசியம்.
* டாம்பனின் வெளிப்பக்கத்தில் ஒரு நூல் இணைக்கப்பட்டிருக்கும். அதைப் பிடித்து வெளியே இழுத்தால் டாம்பன் வெளியே வந்துவிடும்.
* பல மணி நேரம் மாற்றாமல் வைத்திருக்கும் போது, டாம்பன் உபயோகத்தால் இன்ஃபெக்ஷன் வரலாம். அதன் விளைவாக காய்ச்சல் மற்றும் கெட்ட வெள்ளைப் போக்கு ஏற்படலாம். சரியான நேரத்தில் கண்டு பிடித்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது வளர்ந்து, அசாதாரணமாகி, மற்ற தொற்றுக்களை வரவழைக்கவும் காரணமாகலாம்.

டாம்பன் என்பது சின்ன சைஸ் மெழுகுவர்த்தி போன்றுதான் இருக்கும். அதை உபயோகிப்பதால் கன்னி சவ்வு கிழிய வாய்ப்பில்லை!
19

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button