மருத்துவ குறிப்பு

இந்த பழக்கங்கள் எல்லாம் நுரையீரலை மோசமாக சேதப்படுத்தும்

புகைப்பிடிப்பது
நீங்கள் வழக்கமாக புகைப்பிடிப்பவராக இருந்தால், உங்கள் நுரையீரலுக்காக அந்த பழக்கத்தைக் கைவிடுங்கள். புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து கணிசமாக அதிகம் உள்ளது. மேலும் புகைப்பிடிக்கும் பழக்கமானது ஆஸ்துமா, இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோசிஸ், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சிஓபிடி போன்ற நுரையீரல் நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லையா? அப்படியானால் இன்று முதல் அதை செய்ய ஆரம்பியுங்கள். ஏனெனில் உடற்பயிற்சி செய்வது நுரையீரலின் திறன் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரித்து, நீண்ட நாட்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் இது நுரையீரலை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் பல்வேறு நோய்கள் மற்றும் வயது தொடர்பான நுரையீரல் சிக்கல்களுக்கு எதிராக போராடுவதற்கு தயார் செய்ய உதவுகிறது.

வெளியிடங்களில் கவனமாக இல்லாமல் இருப்பது

தற்போது நாம் சுவாசிக்கும் காற்றில் பல்வேறு மாசுக்கள், ரசாயனங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலந்துள்ளன. இவை நுரையீரலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். ஒருவரால் மாசடைந்த உலகத்தை ஒரே இரவில் மாற்ற முடியாது. எனவே உங்கள் நுரையீரலை தீங்கு விளைவிக்கும் காற்றில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அதற்கு வெளியே செல்லும் போது மாஸ்க் மற்றும் ஷீல்டுகளை தவறாமல் அணிய வேண்டும். மேலும் அதிக தூசிகள் அல்லது நச்சுக்கள் நிறைந்த இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சுத்தத்தை புறக்கணிப்பது

ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க வீட்டை மட்டுமின்றி, வீட்டைச் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் வாழும் சுற்றுச்சூழல் ஆரோக்கியமற்று இருந்தால், அது தீங்கு விளைவிக்கும் அச்சு, பூஞ்சை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறிவிடும். மேலும் இது தூசிகள் குவிவதற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக இது புதிதாக நுரையீரல் பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, நுரையீரல் நோய்களைக் கொண்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

உடல் ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பது

நீங்கள் எந்த ஒரு பிரச்சனைக்கும் மருத்துவரிடம் செல்லாதவரா? இப்படி மருத்துவரிடம் எந்த ஒரு பிரச்சனைக்கும் செல்லாமல் இருந்தால், பின் நிலைமை மோசமாகிவிடும். எனவே எப்போதும் எந்த ஒரு பிரச்சனைக்கும் மருத்துவரிடம் செல்லாமல் இருக்காதீர்கள். குறிப்பாக சுவாசிப்பது சம்பந்தமான பிரச்சனைகளை சந்தித்தால், மருத்துவரை ஆரம்பத்திலேயே அணுகி சிகிச்சை மேற்கொண்டால், நிலைமையை கட்டுப்படுத்தி சரிசெய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button