27.8 C
Chennai
Saturday, May 18, 2024
neimeen karuvadu thokku 1609574839
ஆரோக்கிய உணவு

நெய்மீன் கருவாடு தொக்கு

தேவையான பொருட்கள்:

* நெய்மீன் கருவாடு – 2 துண்டு

* சின்ன வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)

* பூண்டு – 1/8 கப் (நறுக்கியது)

* தக்காளி – 3 (நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 3/4 கப்

செய்முறை:

* முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.

* பிறகு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதே சமயம் மறுபுறம் கருவாட்டை கழுவி, வெதுவெதுப்பான நீரில் கருவாடை போட்டு, பத்து நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிடவும்.

* பின் வாணலியில் கழுவிய கருவாடை போட்டு, அதில் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அதில் கருவாடு மூழ்கும் வரை நீரை ஊற்ற வேண்டும்.

* பின்பு நன்கு கிளறவிட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து மூடியைத் திறந்து, கருவாடு வெந்துள்ளதா என்பதை கரண்டியால் அழுத்தி பார்க்க வேண்டும். கருவாடு மென்மையாக இருந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

* இப்போது கருவாட்டில் உள்ள நடுமுள்ளை நீக்கிவிட்டு, மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு வற்றிவிட்டால், சுவையான நெய்மீன் கருவாடு தொக்கு தயார்.

Related posts

அரிசியை ஏன் ஊறவைத்து சாப்பிடவேண்டும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க……

sangika

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி

nathan

தெரிஞ்சிக்கங்க… எந்த உணவுகளை வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டும்

nathan

இயற்கை தரும் கோடை பாதுகாப்பு வெள்ளரிக்காய்

nathan

எக்காரணம் கொண்டும் இந்த நேரங்களில் தண்ணீரை குடிச்சிடாதீங்க…

nathan

கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை

nathan