varutharachamushroomkulambu 1648278737
சைவம்

வறுத்தரைத்த காளான் குழம்பு

தேவையான பொருட்கள்:

* காளான் – 1 கப் (நறுக்கியது)

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

* தேங்காய் – 1 கப்

* கறிவேப்பிலை – 1 கையளவு

* பட்டை – 1 இன்ச் துண்டு

* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய், கறிவேப்பிலை, சோம்பு, பட்டை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு காளானை சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், வறுத்தரைத்த காளான் குழம்பு தயார்.

Related posts

மஷ்ரூம் புலாவ்

nathan

கொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma

nathan

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan

வெங்காயப் பூண்டுக் குழம்பு செய்வது எப்படி

nathan

பேச்சுலர்களுக்கான… பருப்பு கடையல்

nathan

சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம்

nathan

அரிசி பருப்பு சாதம்

nathan

வஞ்சிரம் மீன் கிரேவி

nathan