28.6 C
Chennai
Friday, May 17, 2024
paneerbonda 1611317454
சிற்றுண்டி வகைகள்

பன்னீர் போண்டா

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு – 1 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

* புதினா – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* பேக்கிங் சோடா/சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்

* பன்னீர் – 1 கப் (சதுர துண்டுகளாக்கப்பட்டது)

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

paneerbonda 1611317454

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட வேண்டும்.

* பிறகு கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.

* அடுத்து அதில் நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.

 

Related posts

தினை சோமாஸ்

nathan

இடியாப்ப பிரியாணி

nathan

அடைக் கொழுக்கட்டை

nathan

பனீர் பாலக் பரோட்டா

nathan

கிரீன் ரெய்தா

nathan

ஆளி விதை இட்லிப் பொடி

nathan

காஞ்சிபுரம் இட்லி

nathan

சுவையான கார மிக்ச‌ர் அவலை வைத்து செய்வது எப்படி?

nathan

சத்தான கோதுமை ரவா தோசை

nathan