27.3 C
Chennai
Sunday, May 19, 2024
25 vegetablecurry
சைவம்

வெஜிடேபிள் கறி

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2 (கழுவி நறுக்கியது)
வெங்காயம் – 2-3 (நறுக்கியது)
பீன்ஸ் – 4-5 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பசலைக் கீரை – 50 கிராம் (நறுக்கியது)
பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 1 1/2 கப்

செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் பீன்ஸ், பசலைக் கீரை, பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கி, மல்லி தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி, தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, கொத்தமல்லி தூவி கிளறி விட வேண்டும். இப்போது சுவையான வெஜிடேபிள் கறி ரெடி!!!
25 vegetablecurry

Related posts

வாழைக்காய் பொடிக்கறி

nathan

பரோட்டா!

nathan

உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்

nathan

மெக்சிகன் ரைஸ்

nathan

பீர்க்கங்காய் புலாவ்

nathan

30 வகை பிரியாணி

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan

சுவையான காலிபிளவர் – பட்டாணி குருமா

nathan

கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan