அறுசுவைஇலங்கை சமையல்

சுட்ட கத்திரிக்காய் சம்பல்

சுட்ட-கத்திரிக்காய்-சம்பல்-சமையல்-குறிப்புகள்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 1
தக்காளி – 2
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 1
கேரட், வெள்ளரிக்காய் – விரும்பினால்
உப்பு – தேவைக்கு

செய்முறை:

நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்) ஆறியதும் தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்.

வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

சுட்ட கத்திரிக்காய் சம்பல் தயார்.

இதி‌ல் நிறைய வகைகள் உள்ளன. கருவாட்டை சுட்டு, முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல். கத்திரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல்.

கத்திரிக்காயும், தக்காளியும் நீக்கிவிட்டு புளியை கெட்டியாக கரைத்து 3 ஸ்பூன் வெங்காயத்துடன் சேருங்கள்… வெங்காய சம்பல் தயார்.

Related posts

பருத்தித்துறை வடை

nathan

யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)

nathan

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan

பேரீச்சப்பழ கேக்/ Date cake/ டேட்ஸ் கேக்

nathan

அச்சு முறுக்கு

nathan

மொறுமொறுப்பான… கார தட்டை

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

nathan

மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?

sangika

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala ,tamil samayal kurippu

nathan