கேக் செய்முறை

முட்டையில்லா வனிலா மைலோ கேக்/ Egg less Vanilla-Milo Marble Cake

தேவையான பொருட்கள்

பொதுப்பாவனை கோதுமை மா —– 1 கப் (250 மில்லி லீட்டர்)
ரவை —- 1 கப்
300 மில்லி லீட்டர் கட்டி பால் —– 1
சீனி —- 1 கப்
பட்டர் —- 250 கிராம்
மென் சூடான நீர் —- 150 மில்லி லீட்டர்
மைலோ —- 2 மேசைக்கரண்டி
வனிலா —- 1 தே-கரண்டி

பேக்கிங் பவுடர் —- 1 1/2 தேகரண்டி

செய்முறை

– பொதுப்பாவனை கோதுமை மா, ரவை, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து 3- 4 முறை அரிதட்டில் போட்டு அரித்து எடுத்து வைக்கவும்

– கட்டி பால் தகரத்தை திறந்து வாய் அகன்ற, கொத்தன் பாத்திரத்தில் இடவும்
– தகரத்தில் ஒட்டியிருக்கும் பாலை மென் சுடு நீர் கொண்டு கழுவி அதனையும் பாத்திரத்தில் விடவும்
– கலவையை 10-15 நிமிடம் நடுத்தரமான வேகத்தில் அடிக்கவும்
Canada+326
– பட்டர், சீனி இரண்டையும் இன்னொரு பாத்திரத்தில் இட்டு 15 நிமிடம் நன்கு அடிக்கவும்.

– பதம் சரியா என்பதை இரண்டு விரல்களுக்கிடையே பட்டர்- சீனி கலவையை உரோஞ்சி பார்க்கும் போது சீனி துகள்கள் இல்லாதிருக்க வேண்டும் அல்லது மிக குறைவாக இருக்க வேண்டும்
Canada+328
– நன்கு அடித்த பட்டர்-சீனி கலவையினுள், அடித்து வைத்திருக்கும் கட்டிபால் கலவையை சேர்த்து ஒரு 3-5 நிமிடம் அடிக்கவும்.

– அடித்த கலவையுடன், அரித்து வைத்த கோதுமை மா-ரவை-பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து 2 நிமிடம் அடிக்கவும்

– கலவையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியுடன் வனிலாவை சேர்த்து 1 நிமிடம் அடிக்கவும்

– மிகுதி பகுதிக்கு மைலோவை சேர்த்து அடிக்கவும்

Canada+331

– பட்டர் தடவிய கேக் தட்டில் முதலில் வனிலா சேர்த்து அடித்த கலவையை கொட்டி பரவவும்

– அதன் மீது மைலோ சேர்த்து அடித்த கலவையை கொட்டி பரவவும்

– பரவிய கலவை மீது முள்ளு கரண்டி யை உட் செலுத்தி ஒழுங்கற்ற விதத்தில் மெதுவாக ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் வரை மெல்லிதாக கலக்கவும்

– மீண்டும் மேற்பரப்பை மட்டப்படுத்தவும்
Canada+332

– 180 பாகை செல்சியசில் சூடாக்கிய இல் 25- 30 நிமிடம் சுட்டு எடுக்கவும்
Canada+334
Canada+336

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button