அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

உங்கள் தோலிற்கு ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் 10 விதமான் நன்மைகள்

530b55e4ccbb4_susurrus_spa_feature_thai_stem_facialஃபேஷியல் அனைத்து அழகு சிகிச்சை மையங்களிலும் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது. உண்மையில், அனைத்து வயதுடைய‌ பெண்களும் ஒருமனதாக, தங்களின் முகப்பொலிற்கும், இளமையான தோற்றத்தினை தருவதற்கும் ஃபேஷியல் உதவி செய்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இப்போதெல்லாம் பல விதங்களில் ஃபேஷியல் வகைகள் ச்ந்தைகளில் கிடைக்கின்றன, இவற்றில் எது உங்களுக்கு பொருந்துகிறதோ அதை நீங்கள் தேர்ந்த்தெடுத்து பயன்படுத்தலாம். அது எது வேண்டுமானாலும் இருக்கலாம், தங்க ஃபேஷியல், வைர ஃபேஷியல், பழ ஃபேஷியல், சாக்லேட் ஃபேஷியல் அல்லது முத்து ஃபேஷியல் இப்படி எதாவது ஒன்றாக இருக்கலாம், ஆனால் முடிவுகள் எல்லாம் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் – இதனால் தோலான‌து பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்! நீங்கள் உங்களுக்கு பிடித்த ஸ்பாவில், மெழுகு ஃபேஷியல், கால்வனிக் ஃபேஷியல், கடற்பாசி கொண்டு செய்யப்படும் ஃபேஷியல், நறுமண ஃபேஷியல், மற்றும் ரத்தின ஃபேஷியல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து செய்யலாம்..
ஆனால் இதை தவிர மிகவும் தெளிவான, பளபளப்பான சருமத்தை பெற, இந்த‌ ஃபேஷியல் உங்களின் முக அமைப்பிற்கு எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம்? ..
ஃபேஷியலினால் ஏற்படும் டாப் 10 நன்மைகள்: ..
நீங்கள் எதற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும் என்று கண்டறிய கீழே கூறியுள்ள‌ காரணங்களை படித்து தெரிந்து கொள்ளவும்! ..
1. சிறந்த முறையில் செய்யப்படும் க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸரைஸிங்:..
ஃபேஷியலில் நிபுணர்களை கொண்டு உங்கள் தோலிற்கு செய்யப்படுவது என்னவென்றால் க்ளென்சிங், டோனிங், ஸ்கரப்பிங் மற்றும் மாய்ஸரைஸிங்தான். ஃபேஷியலனாது உங்கள் தோலின் உள்ளே ஆழமாக செயல்படுவதோடு மற்றும் இறந்த செல்களையும் ஒழிக்கிறது. இது உங்கள் தோலை ஈரப்பதத்துடனும்,( தமிழ் சமையல்.நெற் )
முற்றிலும் போஷாக்குடனும் மற்றும் மிருதுவாகவும் உணரவைக்கும்.
2. உங்களின் ஒட்டு மொத்த தோற்றத்தையும் அழகாக காட்டுகிறது:
ஃபேஷியல் உங்கள் தோலுக்கு அழகான வெளிப்புற தோற்றத்தினையும், கூடுதலாக பொலிவையும் தருகிறது. பெரும்பாலும், தோலானது சுட்டெரிக்கும் சூரியனாலும், மாசு, மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுவதாலும் மற்றும் வயதாவதாலும் சுருக்கங்களும் ஏற்படுகிறது. ஃபேஷியல் செய்வதால் இந்த பிரச்சினைகளில் இருந்து எளிதில் உங்களையும் உங்களின் தோலையும் பாதுகாக்கலாம்…
3. உங்கள் தோலை ஆரோக்கியமாக வைக்கவும்:..
ஃபேஷியல் செய்வதால் உங்கள் தோலை ஆரோக்கியமானதாக வைக்க உதவும். ஊட்டமளிக்கும் க்ரீம் போன்ற பொருட்கள், பேஸ் மாஸ்க், ஜெல், மற்றும் மாய்ஸ்ட்சரைஸர், போன்ற பல்வேறு பொருட்களுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும், எனென்றால் இவை எல்லாம் உங்கள் தோலிற்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ( தமிழ் சமையல்.நெற் )

4. தோல் துளைகளும் சுவாசிக்கும்:..
ஃபேஷியல் செய்யும் போது உங்களின் தோலிற்கு நீராவி கொடுக்கப்படுகிறது, இது உங்கள் தோல் துளைகளை திறக்க உதவுகிறது. இந்த நீராவி பிடிப்பதால் நம் முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ், வொய்ட் ஹெட்ஸ் போன்றவைகள் எளிதில் நீக்கப்படுகின்றன. இதன் விளைவாக உங்கள் தோல் பகுதியில் உள்ள‌ துளைகள் திறப்பதால், உங்கள் தோலான‌து சுதந்திரமாக சுவாசிக்க முடியும். ..
5. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது:..
ஃபேஷியலில் ஒரு நல்ல மசாஜ் எனபது அனைத்து அழகு நிலையங்களிலும் எல்லோராலும் செய்யப்படுவது. இப்படி ஃபேஷியல் செய்யும் போது மசாஜ் செய்வதால் முக பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உண்மையில், ஒரு நல்ல இரத்த ஓட்டம் உங்களுடைய முகத்தில் ஒரு ஆரோக்கியமான பிரகாசத்தினையும், புத்துணர்ச்சியையும் கொண்டு வருகிறது. ..
6. தோலை சரி செய்தல்:..
ஃபேஷியலினால் சிறப்பாக‌ உங்கள் தோலின் தேவைகளை நன்கு பூர்த்தி செய்ய முடியும். ஃபேஷியல் செய்வதால் உங்கள் தோலுக்கு ஈரப்பதம் அளிப்பதோடு, வறண்ட மற்றும் மந்தமான, சோர்ந்து போன தோலை, இள‌மையாகவும், பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஃபேஷியல் செய்வதினால் உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற கறைகளை அகற்ற முடியும். உங்களின் தோலுக்கு என்னென்ன தேவையோ அதை கண்டிப்பாக ஃபேஷியல் மூலம் பூர்த்தி செய்ய முடியும்…
7. தோலின் தளர்வு தன்மை நீக்கப்பட்டு, நன்கு இறுக்கமடைய செய்கிறது:..
ஃபேஷியல் செய்வதால், தளர்ந்த உங்களின் தசைகள் நன்கு இறுக்கமடைவதோடு, இளமையாக காட்சியளிக்கவும் உதவுகிறது…
8. நன்கு ஓய்வு எடுத்தல்: ..
ஃபேஷியல் செய்வதால் உங்களின் தோலுக்கு நீங்கள் நல்ல ஓய்வை கொடுக்கிறீர்கள். என்ன தோலுக்கு ஓய்வா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா, ஆம் கட்டாயாமாக உங்களின் தோலுக்கு ஓய்வு தேவை. இதனால் உங்கள் தோல் நன்கு தூண்டப்படுவதோடு, உங்கள் உடலின் சோர்வையும், மன அழுத்தத்தையும் போக்குகிறது.
9. உங்களை நேரத்தை ஃபேஷியல் செய்ய கட்டாயம் ஒதுக்க வேண்டும்:..
நீங்கள் ஒரு உழைக்கும் பெண்ணாகவோ, ஒரு புதிய தாயாகவோ, அல்லது வீட்டுப்பாடம் செய்யும் ஒரு மாணவராகவோ இருக்கலாம், ஆனால் ‘எனக்காக’ எவ்வளவு நேரம் ஒதுக்கினாய் என்று உங்களின் தோல் கேட்கும் ச்த்தம் உங்களுக்கு கேட்கவில்லையா. அவரவர் வாழ்க்கையில் அவர்களுடைய பராமரிப்புக்காக ஒருத்தரும் சிறிதளவு கூட நேரம் ஒதுக்குவதில்லை. பெண்கள் வீட்டு வேலைகளை மற்றும் அனைத்து பொறுப்புகளையும் தங்களின் தலைகளில் சுமந்து கொள்வதோடு, அனைத்து பொறுப்புகளும் நம்முடையது என்று எண்ணி அவர்களை அவர்களே ஏமாற்றி கொள்கிறார்கள்.( தமிழ் சமையல்.நெற் )
எல்லா வேலைகளையும் தங்களின் காலுக்கு அடியில் இழுத்து விட்டுக் கொள்வதோடு, அவர்களுக்காக சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று மறந்து விடுகிறார்கள்! எனவே உங்களுக்கு பிடித்த ஸ்பா அல்லது ஒரு அழகு நிலையங்களுக்கு சென்று ஃபேஷியலுக்காக‌ நீங்கள் கட்டாயம் சில மணி நேரம் செலவு செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது உங்களின் கவனத்தை சிதற விடாமல், நல்ல மன நிலையில் மெதுவாகவும், நல்ல முறையிலும் சில மணி நேரம் ஒதுக்கி இதை செய்ய வேண்டும்…
10. உங்களை நீங்களே நேசிக்க பழகுங்கள்:..
நமக்கு தினசரி பொறுப்புகள் எப்பொழுதும் அதிகமாகத்தான் இருக்கும், இருந்தாலும் அவ்வப்போது உங்களை நீங்களே நேசிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களையும், உங்கள் அழகையும் பாராட்ட மறக்காதீர்கள். இதனால் உங்கள் மேல் உங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை வருவதோடு நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலையும் மிகவும் விரும்பி மிகவும் ஈடுபாட்டோடு செய்வீர்கள். எந்த ஒரு துறையிலும் பெண்களுக்கென தனியாக ஒரு சிறப்பு உண்டு, இதனால் எல்லா பெண்களும் தாங்கள் ஒரு இளவரசி போல நடத்தபடவே விரும்புவார்கள். எனவே எப்பொழுதும் உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைக்கவும், இது மேலும் உங்களை அழகாக காட்டும். தன்னம்பிக்கை கொண்ட பெண்கள் முகத்தில் எப்பொழுதுமே ஒரு அழகு தனித்துவமான முறையில் மேலோங்கி இருக்கும்…
இங்கே உங்களுக்கு பல விதமான நன்மைகளை தரக்கூடியவற்றை உங்களுக்கு கூறியுள்ளோம், எனவே இதற்காக நீங்கள் சிறிது நேரம் எடுத்து முயற்சி செய்து பாருங்கள்.என்ன ஃபேஷியல் செய்ய புறப்பட்டு விட்டீர்களா?..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button