28.9 C
Chennai
Monday, May 20, 2024
p28a
சைவம்

வஞ்சிரம் மீன் கிரேவி

தேவையானவை: வஞ்சிரம் மீன் – 500 கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 200 கிராம், பெரிய வெங்காயம், பூண்டு, புளி – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 100 மி.லி, வெந்தயம், மிளகாய்த் தூள் – தலா 50 கிராம், கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் – தலா 20 கிராம், தனியா – 60 கிராம், தேங்காய் – 1.

செய்முறை: பெரிய வெங்காயத்தை அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தைப்போட்டுப் பொரிக்கவும். வெந்தயம் பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கலந்து வதக்கவும். பிறகு, மிளகாய்த் தூள், தனியா, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கலந்து, அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும். பிறகு, கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

பலன்கள்: மீன் சாப்பிட்டால் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் வராது. அதிலிருக்கும் ஒமேகா 3 இதய பிரச்னைகள் தாக்காமலும், மன அழுத்தம் வராமலும் பாதுகாக்கும். எண்ணெயில் பொரிக்காமல், மீன்களை வேகவைத்துச் சாப்பிடுபவர்களுக்கு, மூளை செல்களின் வளர்ச்சி அதிகரித்து, நினைவு ஆற்றல் திறன் மேம்படும். இதுதவிர, பூண்டு, வெங்காயம், தக்காளி, மஞ்சள் என இதில் உள்ள பல பொருட்களும் மருத்துவ குணம்கொண்டவை.
p28a

Related posts

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

nathan

சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் வறுவல்

nathan

சிம்பிளான… டிபன் சாம்பார்

nathan

சோயா சங்க்ஸ் பிரியாணி|soya chunks biryani

nathan

சூப்பரான கடுகு சாதம் செய்வது எப்படி

nathan

வாங்கிபாத்

nathan

சிக்கன் பொடிமாஸ்

nathan

வெஜிடபிள் மசாலா

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan