33.3 C
Chennai
Saturday, May 18, 2024
04 1438688932 tiffen sambar
சைவம்

சிம்பிளான… டிபன் சாம்பார்

வீட்டில் இட்லி, தோசை என்று செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக சிம்பிளான, அதே சமயம் ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன் சாம்பாரை முயற்சித்துப் பாருங்கள்.

இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், மிகவும் ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த டிபன் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 (துண்டுகளாக்கியது)
கேரட் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
புளிச்சாறு – 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 1

தாளிப்பதற்கு…

எண்ணெய்/நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

04 1438688932 tiffen sambar

முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பாசிப்பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 4-5 விசில் விட்டு இறக்கி, மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் உருளைக்கிழங்கு, கேரட், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதனை குக்கரில் உள்ள மசித்து வைத்துள்ள பாசிப்பருப்புடன் சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு, விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அதனை அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, புளிச்சாறு ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சாம்பார் ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இறுதியில் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்தால், டிபன் சாம்பார் ரெடி!!!

Related posts

வெஜிடேபிள் கறி

nathan

குடமிளகாய் சாதம்

nathan

பொடித்த மிளகு சாதம்

nathan

புளியோதரை

nathan

வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்

nathan

பொடி பொடிச்ச புளிங்கறி

nathan

பூண்டு சாதம்

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan