அலங்காரம்கண்களுக்கு அலங்காரம்

கண்களுக்கு மேக்கப்.

Eye-Makeup-Eye-Makeup-tips-For-Brideகண்ணுக்கு மை அழகு என்றது அந்தக் காலம். இன்று கண்ணழகுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் வந்தாச்சு. கண்களுக்கான மேக்கப்பிலும் எக்கச்சக்க புதுமைகள்! ஐ மேக்கப் என்னவெல்லாம் லேட்டஸ்ட்? எந்த சந்தர்ப்பத்துக்கு எப்படி ஐ மேக்கப் செய்ய வேண்டும்? விளக்கமாகப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்.

கண்கள் தான் மனசைப் பிரதிபலிக்கிற கண்ணாடி. நம்ம மனசுக்குள்ள சந்தோஷமோ, சோகமோ, எது இருந்தாலும், அது கண்கள்ல தான் தெரியும். என்னதான் பிரமாதமா மேக்கப் போட்டாலும் கண்களுக்கு மேக்கப் இல்லைனா அந்த அழகு கொஞ்சங்கூட எடுபடாது. வெறுமனே மையும் ஐ லைனரும் மட்டுமே கண்களுக்கு போதும்னு நினைக்குறதில்லை இன்றைய இளம் பெண்கள். சாதாரண காஜல்னு ஆரம்பிச்சு, மஸ்காரா வரைக்கும் எல்லாத்துலயும் புதுமைகள் வந்தாச்சு.

கண்களுக்கான மேக்கப்னு சொன்னதும் முதல்ல நினைவுக்கு வர்றது மை. கருப்பான விஷயங்களுக்கு மையோட கருமையை உதாரணம் காட்டுவோம். ஆனா இப்ப சிகப்பு சிகிச்சை, பச்சை, கிரேனு எல்லா கலர்கள்லயும் கண் மை வருது. அதே மாதிரி பர்ப்பிள், ப்ளு பென்சில்களும் வருது. கண் இமைகள் இயற்கையாகவே நீளமாக, அடர்த்தியாக காட்டலாம். முன்னல்லாம் மஸ்காராவும் கருப்பு கலர்ல மட்டும் தான் வந்திட்டிருந்தது.

இப்ப அதுலயும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. முக்கியமாக கலர்லெஸ் மஸ்காரா ரொம்ப பிரபலம். போட்டதே தெரியாது. ஆனா இமைகள் தனித்தனியா நீளமா, அடர்த்தியா தெரியும். மஸ்காரா உபயோகப்படுத்த முடியாதவங்க, செயற்கையா கிடைக்கிற கண் இமைகளை வாங்கி ஒட்டிக்கலாம். ஐ மேக்கப்ல ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட் என்ன தெரியுமா. புருவங்களுக்கு கீழே, டிராகன், சிறுத்தை, மயில், மண்டை ஓடு ஸ்டிக்கர்களை ஓட்டிக்கிறதுதான்.

பார்ட்டிக்கு போற பெண்கள் இதை ரொம்ப விரும்பறாங்க என்கிற ஹசீனா ஐ மேக்கப் குறித்த சில டிப்ஸ் தருகிறார்.

முகத்துக்கு தினமும் கிளென்சர், டோனர், மாயிச்சரைசர், உபயோகிக்கணும். அதன் பிறகு ஃபவுண்டேஷன் போடணும். கண்களுக்கடியில் கருவளையம் அதிகமிருக்கிறவங்க கண்சீலர் உபயோகிச்சு அதை மறைக்கலாம். அதுக்கு மேலே மேக்கப் போட்டா கருவளையம் தெரியாது.Untitled-7 copy

வேலைக்கு போறவங்களும் காலேஜ் பொண்ணுங்களும் நேச்சுரல் ஷேடு ஐ மேக்கப் சாதனங்களை செலக்ட் பண்ணலாம். லைட் பிரவுன் கலர் லைனரால கண்களோட ஒரங்கள்ல வரைஞ்சுக்கலாம். பிங்க் அல்லது பேபி பிங்க் நிற ஐ ஷேடோ பெஸ்ட்.

பார்ட்டி போகும் போது கிளிட்டர்னு சொல்ற பளபளக்கிற ஐ ஷேடோ உபயோகிக்கலாம். லென்ஸ் உபயோகிக்கிறவங்க, மேக்கப் போடறதுக்கு முன்னாடியே லென்ஸ் போட்டுக்கணும். பாதாம் ஆயில் அல்லது விளக்கெண்ணெய் தடவினா கண் இமைகள் அடர்த்தியா வளரும். சுத்தமான பன்னீரை கண்களுக்குள்ள ஒவ்வொரு சொட்டு விட்டா அழுக்குகள் நீங்கி கண்கள் சுத்தமாகும். எந்தக் காரணம் கொண்டும் கண்கல்ள மேக்கப்போட தூங்கவே கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button