யோக பயிற்சிகள்

பெண்களுக்கு அவசியமான யோகா

அடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்பவே ஆண்களுக்கு, பெண்களுக்கு ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக்கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர்.

இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசனங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் காலத்தில் சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையாகவோ ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆசனப் பயிற்சியாளரிடம், எந்தெந்த ஆசனங்களை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர்காலப் பிள்ளையின் நிலையும் பேணப்படும். பெண்களை அதிகம் தாக்கும், முதுகு வலி, சோகை, ஆர்த்தரைடீஸ், தலை வலி, உயர் ரத்தஅழுத்தம், உடற்பருமன், போன்றவற்றுக்கு ஆசனங்கள் பயனளிக்கின்றன.

மாதவிடாய் சமயத்தில் சில ஆசனங்களை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் சில பெண்களுக்கு அடி வயிற்றில் வலி, கோபம், எரிச்சல், பலவீனம் தோன்றும். இதற்கு யோகாசனங்கள் சிறந்தவை. யோகா டென்ஷனை குறைக்கிறது.

இதனால் வேலைக்கு போகும் பெண்கள் அவசியம் யோகா கற்க வேண்டும். பருமனான பெண்கள் யோகாவால் எடையை குறைக்க முடியும். ஆனால் நிறுத்தி விட்டால் மறுபடியும் எடை கூடலாம்.
vfc

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button