மருத்துவ குறிப்பு

கண் பார்வை அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்!!!

ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில், கண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது.

ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும், சீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்…..

பயிற்சி 1

இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். வெளிச்சம் குறைவான இடங்களில் இவ்வாறு பயிற்சி செய்தல் நல்லது.

பயிற்சி 2

கண்களை இமைத்தல், கணினி பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. கண்களை சீரான முறையில் இமைத்து வந்தாலே நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.

பயிற்சி 3

உற்று நோக்கும் பயிற்சி, கணினியில் வேலை செய்பவர் பலர் இரண்டடி தூர இடைவேளையை மட்டுமே உற்று நோக்கி நான் முழுதும் வேலை செய்வதால், தொலை தூர பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எனவே, 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது, ஏதேனும் தொலைதூர பொருள்களை உற்று நோக்கி பயிற்சி செய்வது அவசியம்.

பயிற்சி 4

கண்களில் அதிக அழுத்தமோ, எரிச்சலோ உணர்ந்தால், உடனே நன்கு தண்ணீர் ஊற்றி கண்களை கழுவுங்கள். பின் 5 நிமிடம் கண்களுக்கு ஓய்வளியுங்கள். இது, கண்களுக்கு ஏற்ப அழுத்தத்தை குறைக்க உதவும்.

பயிற்சி 5

லைசன்ஸ் வாங்க உங்கள் வாகனத்தில் பெரிய “8” போட்டதைப் போல, நீங்களே உங்கள் கண் முன்னே பெரிய எட்டு உள்ளதை போன்று பாவித்து, கண்களாலே எட்டு போட்டு பயிற்சி செய்யுங்கள்.

பயிற்சி 6

ஜூமிங் (zooming) பயிற்சி, உங்கள் விழிகளுக்கு அருகாமையில் இருந்து தூரம் வரை ஏதேனும் நகரும் பொருளை உற்று நோக்கும் பயிற்சி. உதாரணமாக, கைக் கட்டை விரலை, முகத்திற்கு அருகாமையில் இருந்து தூரம் வரை நகர்த்தி உற்று நோக்குதல்.

பயிற்சி 7

அதிகாலை நடைப்பயிற்சி, அதிகாலை சூரிய ஒளி மிகவும் நல்லது, புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இது கண்களை அழுத்தமின்றி, இலகுவாக உணர உதவும்.

பயிற்சி 8

கண்ணாடிகளை சார்ந்து இருக்க வேண்டாம், இது உங்கள் கண் பார்வையை அதிகரிக்க ஒரு போதும் உதவாது, நல்ல உணவும், பயிற்சிகளையும் சீரான முறையில் மேற்கொள்ளுங்கள்.

22 1432265382 11

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button